திரிஷ்யம் 2 ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு ஆரம்பமானது!

சென்னை: 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது

சமீபத்தில் திரிஷ்யம் பாகம்-2 வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் திரிஷ்யம் பாகம் 2 ஹிந்தி படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது

 திரில்லர் படமாக

திரில்லர் படமாக

மலையாள சினிமாக்கள் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெறுகின்றன அந்தவகையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மிகச்சிறந்த திரில்லர் படமாக வெளியானது திரிஷ்யம். கல்லூரி சுற்றுலா சென்ற இடத்தில் மகளிடம் தவறாக படம்பிடித்து மிரட்ட முயலும் போது எதிர்பாராத விதமாக கொலை செய்து விடுகிறாள். மகள் செய்த கொலையை அப்பாவாக இருந்து இதை மறைத்து அந்த கொலை வழக்கில் இருந்து எவ்வாறு தன்னுடைய குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதே திரிஷ்யம் படத்தின் கதை களமாக அமைந்திருந்தது இயக்குனர் ஜீத்து ஜோசப் மிகச்சிறப்பான திரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருந்தார்

திரிஷ்யம்

திரிஷ்யம்

மலையாளத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. பின் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரிஷ்யம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி பட்டையை கிளப்பியது.

 இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இவ்வாறு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற திரிஷ்யம் இரண்டாவது பாகம் கடந்த 2020ஆம் ஆண்டு அதே படக்குழு உடன் இணைந்து எடுக்கப்பட்டது மோகன்லால், மீனா இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சென்ற ஆண்டு திரிஷ்யம் பாகம்2 மலையாளத்தில் மட்டும் வெளியானது இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இந்த நிலையில் திரிஷ்யம் பாகம்-2 இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட அதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில காலமாக நடைபெற்று வந்தது . இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருப்பார். மலையாளம் போலவே இந்தி ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது

 இந்தி ரீமேக் படப்பிடிப்பு துவங்கியது

இந்தி ரீமேக் படப்பிடிப்பு துவங்கியது

இந்த நிலையில் திரிஷ்யம் இரண்டாவது பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. திரிஷ்யம் பாகம் இரண்டிலும் அஜய்தேவ்கான் ஹீரோவாக நடிக்க ஸ்ரேயா சரண் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்தது போலவே அதே கதை களத்தில் இந்தியிலும் இப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் அபிஷேக் பதக் இயக்கி வருகிறார். திரிஷ்யம் 2 இந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை ஸ்ரேயா இப்பொழுது பகிர்ந்துள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X