twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா 'பீரியட்ஸை' நிறுத்தாது.. தினக்கூலி பெண்களுக்கு நாப்கின் வழங்க முன்வந்த பிரபல நடிகர்!

    |

    சென்னை: தினக்கூலி பெண்களுக்கு சானிட்டரி நாப்க்கின்கள் வழங்குவதை ஆதரிக்க வேண்டும் என பேட் மேன் படத்தில் நடித்த நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Dhanush Emotional message | உள்ளம் கனிந்த நன்றி | Dhanush k Raja

    நடிகர் அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் பேட்மேன். இந்த படம் கடந்த2018ஆம் ஆண்டு வெளியானது.

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

    அந்த பதிவுக்கு பின்னால இப்படியொரு கதையா? சமந்தாவை கிண்டலடித்த ஹீரோயின்.. விளாசித் தள்ளிய ஃபேன்ஸ்!அந்த பதிவுக்கு பின்னால இப்படியொரு கதையா? சமந்தாவை கிண்டலடித்த ஹீரோயின்.. விளாசித் தள்ளிய ஃபேன்ஸ்!

    பெரும் வரவேற்பு

    பெரும் வரவேற்பு

    அதன்படி படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், மனைவி படும் சிரமங்களை பார்த்து தீவிர முயற்சிக்கு பிறகு நாப்கினை தயாரிக்கும் மெஷினை கண்டுபிடித்து குறைந்த விலைக்கு விற்பதாக நடித்திருப்பார். இந்தப் படம் இந்தியளவில் நல்ல விமர்சனத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

    கோடிகளில் உதவி

    கோடிகளில் உதவி

    இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார் அக்ஷய் குமார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கிய அக்ஷய் குமார் அதன் பிறகும் மும்பை போலீசார், சினிமா தொழிலாளர்கள் என பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார்.

    டிவிட்டரில் ஆதரவு

    டிவிட்டரில் ஆதரவு

    இந்நிலையில் தினக்கூலி வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி பேட்ஸ் மற்றும் கிட்ஸ்களை வழங்க முன்வந்துள்ளார். தினக்கூலி வேலை செய்யும் பெண்களுக்கு சானிட்டரி பேட் மற்றும் கிட் வழங்கும் பொருட்டு ஒரு பிரச்சாரத்தை டிவிட்டரில் ஆதரித்திருக்கிறார் அக்ஷய் குமார்.

    பலரும் பாராட்டு

    பலரும் பாராட்டு

    இதுதொடர்பாக ட்விட்டரில் அறிவித்துள்ள அக்ஷய் குமார், பொதுமக்கள் நன்கொடை அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு பெரிய காரியத்திற்கு உங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கோவிட் பீரியட்ஸை நிறுத்தாது, மும்பை முழுக்க உள்ள பின்தங்கிய பெண்களுக்கு சானிட்டரி பேட் வழங்க உதவுங்கள். ஒவ்வொரு நன்கொடையும் கணக்கிடப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
    அக்ஷய் குமாரின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Akshai Kumar urging public support to provide Sanitary pads. He has twitted that Covid doesn't stop Periods.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X