பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்.. யாருன்னு பாருங்க

மும்பை: பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் டிரைவிங் லைசென்ஸ். காமெடி டிராமாவாக இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் பிரித்விராஜ் மற்றும் சுராரி வெஞ்சாரமூடு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சாச்சி கதை திரைக்கதை

சாச்சி கதை திரைக்கதை

ஜூனியர் லால் இப்படத்தை இயக்கியிருந்தார். அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநரான சாச்சி இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரூ 22.5 கோடி வசூல்

ரூ 22.5 கோடி வசூல்

4 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 22.5 கோடி ரூபாயை வசூல் செய்தது. இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கைதி ரீமேக்

கைதி ரீமேக்

சுராரி வெஞ்சாரமூடு கதாபாத்திரத்தில் எம்ரான் ஹஸ்மியும் நடிக்க உள்ளனர். தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிகளவு இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான் நடிக்க உள்ளார்.

விக்ரம் வேதா ரீமேக்

விக்ரம் வேதா ரீமேக்

இதேபோல் தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் இந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயீப் அலிகான் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது. விக்ரம் நடித்த அந்நியன் படத்தை இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அதிகளவு மலையாள படங்கள்

அதிகளவு மலையாள படங்கள்

இதேபோல் மாநகரம் படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் ஆக உள்ளது. இதேபோல் மலையாள படங்களும் அதிகளவு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அக்ஷய் குமாரின் ரீமேக்ஸ்

அக்ஷய் குமாரின் ரீமேக்ஸ்

மம்முட்டி, பிருத்விராஜ் நடித்த போக்கிரிராஜா, சித்திக், லால் இணைந்து இயக்கிய ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், முகேஷ் நடித்த மாட்டுப்பட்டி மச்சான், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த வெள்ளானைகளுடெ நாடு, பாசிலின் மணிச்சித்திரதாழ், மோகன்லால், முகேஷ் இணைந்து நடித்த போயிங் போயிங் ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர் அக்ஷய் குமாரே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X