உச்சா போகுற இடத்துல இங்கிலாந்து அரசையே ஆட்டம் காண வைக்கும் வசனம்.. கேசரி 2 டிரைலர் தரமான சம்பவம்!
மும்பை: அனுராக் சிங் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கேசரி திரைப்படம் தேசப்பற்று திரைப்படமாக வெளியானது. தொடர்ந்து அக்ஷய் குமார் பல தேசப்பற்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் கேசரி சாப்டர் 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கேசரி சாப்டர் 2 படத்தை கரன்சிங் தியாகி இயக்கி உள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமார் வழக்கறிஞராக நடித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக மாதவன் மிரட்டி உள்ளார். மேலும், நடிகை அனன்யா பாண்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணையை கையில் எடுத்து போராடிய ஒரு வழக்கறிஞரின் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சொதப்பி வரும் அக்ஷய்குமார்: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக வெளியாகி வரும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவராத வண்ணம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கி வருகிறது. கடைசியாக சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படமும் செல்ஃப் எடுக்கவில்லை.
கேசரி சாப்டர் 2 சம்பவம் உறுதி: ஆனால், அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கேசரி சாப்டர் 2 திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அவருக்கு ஈட்டி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கிற அளவுக்கு படத்தின் டிரைலர் அட்டகாசமாக வெளியாகி உள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து பாட புத்தகங்களில் படித்த மக்கள் திரையில் அந்த கொடுமையை ரத்தமும் சதையுமாக காணும் அளவுக்கு காட்சிகள் பயங்கரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

அக்ஷய் குமார் vs மாதவன்: அக்ஷய் குமார் ஒரு பக்கம் வழக்கறிஞராக ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த விசாரணை நடத்தி வரும் நிலையில், அவருக்கு எதிராக மாதவனை வழக்கறிஞராக களம் இறக்கி கர்ஜிக்க வைத்துள்ளனர். ஏற்கனவே ஷைத்தான் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய மாதவன் இந்த படத்திலும் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தோரணையே நெகட்டிவ் ரோலை எல்லாம் தூக்கி சாப்பிடுவார் என்பதை டிரைலரிலேயே கச்சிதமாக காட்டியுள்ளனர்.
எம்பயரே சுருங்கி விட்டது: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக நீதி கேட்டு வாதாடி வரும் வழக்கறிஞரிடம் என்ன ஆதாரம் உள்ளது என மாதவன் அடித்து நொறுக்குகிறார். சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு இந்தியர்களும் நாய்களும் வரக்கூடாது என போட்ர்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞரான அக்ஷய்குமார் அங்கே வருவதைப் பார்த்த வெள்ளைக்காரர் அவரை எதிர்த்து கேள்விக் கேட்க, அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு Empire is Shrinking என அக்ஷய் குமார் வசனம் பேசும் காட்சியுடன் டிரைலரை அட்டகாசமாக கட் செய்து வெளியிட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 18ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாக காத்திருக்கிறது. இந்த படமாவது அக்ஷய் குமாருக்கு வெற்றியை தருமா என வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











