ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஸ்டண்ட் செய்த ஸ்டார்கள்.. ரகளையான வீடியோ
லக்னோ: 'படே மியான் சோட் மியான்' படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். படமானது ஈத் பண்டிகையையொட்டி ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் லக்னோவில் அக்ஷய் குமாரும், டைகர் ஷெராஃப்பும் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள படம் படே மியான் சோட் மியான். பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

மற்ற நட்சத்திரங்கள்: இப்படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். கண்டிப்பாக அவரது நடிப்பு பலரையும் மிரள வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. அவர் தவிர்த்து சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர், அலயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்னர். இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'படே மியான் சோட் மியான்' படம் வெளியாக உள்ளது. இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் எப்போது ரிலீஸ்: வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஈத் ஏப்ரல் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஸ்டண்ட் செய்த அக்ஷய் குமார்: பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் இப்போதிருந்தே ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் அக்ஷய் குமாரும், டைகர் ஷெராஃப்பும் தற்போது செய்திருக்கும் ப்ரோமோஷன் வித்தியாசமானதாக இருக்கிறது. அதாவது லக்னோவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இரண்டு பேரும் ரியலாகவே ஸ்டண்ட் செய்தனர். அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மேக்கிங் வீடியோ: முன்னதாக படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. வீடியோவில் டைகர் ஷெராஃப் தோன்றி படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த்கொண்டிருந்தார். மேலும் பல ஆக்ஷன் காட்சிகள் ரியலாகவே படமாக்கியிருப்பது அந்த வீடியோவின் மூலம் உறுதியானது. அதுமட்டுமின்றி பல ஆபத்தான இடங்களிலும் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார்கள். அந்த வீடியோவுக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











