இந்திக்கு போன ஜிகிர்தண்டா... மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது

மும்பை : தமிழில் பாபி சிம்ஹா, சித்தார்த், லஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான படம் ஜிகிர்தண்டா.

கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து தற்போது இந்தப் படம் இந்தியிலும் ரீமேக்காகி வருகிறது.

ஜிகிர்தண்டா படம்

ஜிகிர்தண்டா படம்

நடிகர் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான படம் ஜிகிர்தண்டா. கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பு பாராட்டிற்கு உள்ளானது. படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படம் அவருக்கு சிறப்பான இயக்குநர் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

இந்திக்கு போன ஜிகிர்தண்டா

இந்திக்கு போன ஜிகிர்தண்டா

இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்திருந்தனர். இந்நிலையில் படம் தற்போது இந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. அக்ஷய் குமார் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை பர்ஹத் சம்ஜி இயக்கி வருகிறார். படத்தில் கிர்த்தி சனன் இயக்குநராக சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் மார்ச் 18ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பச்சன் பாண்டே ட்ரெயிலர்

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கேங்ஸ்டராக அவரது கெட்டப் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. படத்தில் அவரது கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குநர்.

நாயகியாக ஜாக்குலின்

நாயகியாக ஜாக்குலின்

படத்தில் மேலும் ஹர்ஷத் வர்சி, பங்கஜ் திரிபாதி, சஞ்சய் மிஸ்ரா, அபிமன்யு சிங் உள்ளிட்டவர்களும் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் அக்ஷய் குமாரின் காதலுக்குரியவராக நடித்துள்ளார். படத்தை சஜித் நடியாவாலா தயாரித்துள்ளார். படம் ஹோலி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது.

வெற்றிப்படமான ஜிகிர்தண்டா

வெற்றிப்படமான ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா படம் வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்களை எதிர்கொண்டு, சிறப்பான விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் சுப்புராஜிற்கும் சிறப்பான ஓபனிங்கை கொடுத்தது இந்தப் படம் தொடர்ந்து இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தில் காமெடியும் படத்தில் இயல்பாக அமைந்தது. அந்த வகையில் அக்ஷய் நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் எத்தகைய அனுபவத்தை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழிலிருந்து ரீமேக்காகும் படங்கள்

தமிழிலிருந்து ரீமேக்காகும் படங்கள்

தமிழில் சிறப்பான பல படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பல இளம் இயக்குநர்கள் தங்களை நிரூபிக்கும் முயற்சியில் கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். தமிழில் வெற்றிப்பெறும் படங்களை உடனடியாக மற்ற மொழிகளில் உருவாக்க இயக்குநர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான ரிலீசான ஜிகிர்தண்டா தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X