Kashmir Files படத்தை கண்டுக்காத பாலிவுட் பிரபலங்கள்.. குற்றச்சட்டு எழுந்ததும் ஆஜரான அக்‌ஷய் குமார்!

மும்பை: இஸ்லாமிய மதத்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் வன்முறைகள் குறித்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை அள்ளி உள்ளன.

இந்நிலையில், காஷ்மீரில் சித்திரவதைக்கு உள்ளான இந்துக்கள் குறித்த படமாக உருவாகி உள்ள Kashmir Files திரைப்படம் ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபம் கெர், மிது சக்கரவர்த்தி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கஷ்மீர் ஃபைல்ஸ்

கஷ்மீர் ஃபைல்ஸ்

1990களில் கஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிய நிலையில், அங்குள்ள இந்துக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறை தாக்குதல்களை அப்படியே அப்பட்டமாக இந்த படம் எடுத்திருப்பதாக பாலிவுட் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் கடந்த 2 நாட்களில் கஷ்மீர் ஃபைல்ஸ் நல்ல வசூலை பெற்றிருக்கிறது.

மோடி பாராட்டு

மோடி பாராட்டு

இப்படியொரு சர்ச்சைகளை கிளப்பக்கூடிய படத்தை இயக்கிய இயக்குநர் அக்னிகோத்ரியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். மேலும், கஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு பாஜகவினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னார். பாலிவுட் ரசிகர்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த படத்தை பாராட்ட மறுப்பது ஏன் என்றும் மாஃபியா குயின் கங்குபாய் கத்தியவாடி படத்தை மட்டும் அப்படி கொண்டாடியது ஏன் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் அனுபம் கெர் நடிப்பையும் இயக்குநரின் துணிச்சலான இயக்கத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆஜரான அக்‌ஷய் குமார்

ஆஜரான அக்‌ஷய் குமார்

பாலிவுட் பிரபலங்கள் யாருமே இந்த படத்தை கண்டும் காணாமல் இருப்பது போல நடிப்பது ஏன் என ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அனுபம் கெர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என பாராட்டி உள்ளார்.

மன்மோகன் சிங்காக

மன்மோகன் சிங்காக

பிரபல பாலிவுட் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அனுபம் கெர் முன்னதாக The Accidental Prime Minister எனும் படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது The Kashmir Files படத்தில் கதையின் நாயகன் புஷ்கர் நாத் பண்டிட் ஆக நடித்திருக்கிறார் அனுபம் கெர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X