கபில் ஷர்மா ஷோவில் விபரீதம்.. உயிரை காப்பாற்றிய அக்‌ஷய் குமார்.. ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார் . கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படம் வெளியானது. ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க காமெடி ஷோ ஒன்றில் அக்‌ஷய் குமார் செய்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Akshay Kumar Sarfira Bollywood

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், "ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

வரிசையாக தோல்விகள்: அக்‌ஷய் குமாருக்கு கடைசியாக எந்தப் படம் வெற்றி பெற்றதென்று அவரிடமே சென்று கேட்டாலும் அவருக்கே தெரியாத நிலைதான் இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஓஎம்ஜி 2, மிஷன் ராணிகஞ்ச், படே மியான் சோட்டே மியான் ஆகிய மூன்று படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார் அக்‌ஷய் குமார்.

சூரரைப் போற்று ரீமேக்: நிலைமை இப்படி இருக்க எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளி, கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் பாலிவுட்டிலும் இயக்கினார். சர்ஃபிரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். ஆனால் அக்‌ஷய் குமார் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படத்தின் ரிசல்ட் அமைந்து தோல்வியையே சந்தித்திருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அக்‌ஷய் குமார் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கபில் ஷர்மாவின் காமெடி ஷோ ஒன்றில் கலந்துகொண்டார் அக்‌ஷய். அப்போது அந்த ஷோவில் ரோப்பில் தொங்கியபடி ஃபெர்ஃபார்ம் செய்தார் ஒருவர். அந்த சமயத்தில் அவருக்கு திடீரென மயக்கம் வர; ரோப்பிலேயே தொங்கியபடி இருந்தார். உடனடியாக செட்டில் இருந்த அக்‌ஷய் குமார் ஓடி சென்று அந்த நபருக்கு உதவி செய்து உயிரை காப்பாற்றினார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அக்‌ஷய் குமாருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X