தியேட்டருக்கு வாருங்கள்.. திரைத்துறைக்கு புத்தூயிர் தாருங்கள்.. நடிகர் அக்ஷய்குமார் வேண்டுகோள்!

மும்பை: தியேட்டருக்கு வந்து படங்களை பார்க்குமாறு பார்வையாளர்களுக்கு பிரபல நடிகரான அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்திய சினிமாவும் முடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன.

பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்து கொரோனா இரண்டாவது அலை மிரட்டியதால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன.

திறக்கப்படாத தியேட்டர்ஸ்

திறக்கப்படாத தியேட்டர்ஸ்

தற்போது மீண்டும் சில மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

அக்ஷய் குமார் வேண்டுகோள்

அக்ஷய் குமார் வேண்டுகோள்

இந்நநிலையில் அடுத்தடுத்து 5 படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய காத்து கொண்டிருக்கும் நடிகர் அக்ஷய் குமார் பார்வையாளர்கள் தியேட்டருக்கு சென்று படங்களை பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இயல்பு நிலைக்குத் திரும்புகிறது

இயல்பு நிலைக்குத் திரும்புகிறது

ஒரு செய்தி போர்ட்டலுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் அக்ஷய் குமார், ஒரு வருடத்தில் மீண்டும் நான்கு முதல் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இதன் மூலம் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அக்ஷய் குமார் அது அப்படியே நீடிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Recommended Video

தமிழ்நாட்டின் Dulquer Salmaan நம்ம Ashwin | KPY Bala Fun interview | Filmibeat Tamil
மோசமான நிலைமை முடிந்துவிட்டது

மோசமான நிலைமை முடிந்துவிட்டது

மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாக பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கைக் காட்சிப்படுத்தவும் கட்டவிழ்த்துவிடவும் காத்திருந்ததாகவும் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது அலைக்கு முன்பு இருந்ததைப் போல தொழில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், மோசமான நிலைமை முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகவும் கடினமாக இருந்தது

மிகவும் கடினமாக இருந்தது

மேலும் ஒட்டுமொத்த தொழில்துறையினருக்கும் இந்த ஒன்றரை வருடம் மிகவும் கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். நடிகர் அக்ஷய் குமாரின் நடிப்பில் சூர்யவன்ஷி, பிரித்விராஜ், பச்சன் பாண்டே, ரக்ஷா பந்தன் மற்றும் ராம் சேது ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

மும்பையில் தியேட்டர்கள் மூடல்

மும்பையில் தியேட்டர்கள் மூடல்

கடைசியாக அக்ஷய் குமார் நடிப்பில் பெல் பாட்டம் படம் ரிலீஸ் ஆனது. தியேட்டரில் ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்தது. ஆனால் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் பெல் பாட்டம் படம் மகாராஷ்டிராவில் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X