Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ஆன்லைனில் லீக்கான போதும்.. முதல் நாளில் பெத்த அமொவுண்டை வசூலித்த பெல் பாட்டம்.. குஷியில் பாலிவுட்!
மும்பை: அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களுல் ஒருவர் நடிகர் அக்ஷய் குமார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
இதுவரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். அவற்றில் 53 படங்கள் கமர்ஷியல் ஹிட். தேசிய விருது, பத்ம விருது, பிலிம் ஃபேர் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
எங்க
ஏரியா
உள்ள
வராதே..
சென்னை
28
முதல்
சார்பட்டா
பரம்பரை
வரை..
மெட்ராஸ்
382
சினிமா
ஸ்பெஷல்!

ஷங்கர் இயக்கத்தில் தமிழில்
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் நடித்தார். இதில் பக்ஷி ராஜன் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்தி மட்டுமின்றி மராத்தி, பஞ்சாபி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அக்ஷய் குமார்.

காஞ்சனா ரீ மேக் லக்ஷ்மி
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீமேக் படமான லக்ஷ்மி படத்தில் நடித்தார். இதில் சரத்குமார் கதாப்பாத்திரத்தில் நடித்தார் அக்ஷய் குமார். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. தற்போது நடிகர் அக்ஷய் குமார் பிரித்திவிராஜ், சூர்யவன்ஷி, பச்சன் பாண்டே, அட்ராங்கி ரே, ராம் சேது, ரக்க்ஷா பந்தன், சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அக்ஷய் குமார் நடிப்பில் பெல் பாட்டம்
இந்நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் பெல் பாட்டம். பெல் பாட்டம் படம் 1980-களில் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஸ்பை த்ரில்லர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹுமா குரேஷி , லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பு
கொரோனா முதல் அலையின்போது படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற படக்குழு லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது. இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

தியேட்டரில் ரிலீஸ் ஆன பெல் பாட்டம்
கொரோனா
அச்சுறுத்தல்
காரணமாக
இந்தப்
படத்தை
ஓடிடியில்
ரிலீஸ்
செய்ய
படக்குழு
ஆரம்பத்தில்
திட்டமிட்டது.
அமேசான்
நிறுவனம்
இந்தப்
படத்தின்
டிஜிட்டல்
வெளியீட்டு
உரிமையைக்
கைப்பற்றியது.
ஆனால்,
தற்போது
கொரோனா
தொற்று
குறைந்துள்ளதால்
நேற்று
முன்
தினம்
இந்தப்
படம்
உலகம்
முழுவதும்
திரையரங்குகளில்
ரிலீஸ்
ஆனது.
கொரோனா
இரண்டாவது
அலைக்கு
பிறகு
திரையரங்குகளில்
இந்தப்
படம்
ரிலீஸ்
செய்யப்பட்டதால்
பாலிவுட்
பிரபலங்கள்
பலரும்
படக்குழுவின்
துணிச்சலை
பாராட்டினர்.

ஆன்லைனில் ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்
நேற்று படம் ரிலீஸ் ஆன நிலையில் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் Filmywap ஆகிய பைரசி தளங்கள் படத்தை ஆன்லைனில் லீக் செய்தன. ஆன்லைனில் படம் ரிலீஸ் ஆனதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கும் சூழல் ஏற்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் பெல் பாட்டம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பெல் பாட்டம் முதல் நாள் வசூல்
இந்திய பாக்ஸ் ஆபிஸ் கருத்துப்படி, அக்ஷய் குமார் நடித்த பெல் பாட்டம் படம் வெளியான முதல் நாளில் 2.75 கோடி ரூபாயை வசூலித்தது. மகாராஷ்டிரா, அசாம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பெல் பாட்டம் ரிலீஸ் செய்யப்படவில்லை. மகாராஷ்டிராவில் வெளியிடப்பட்டிருந்தால் படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

படக்குழு நிம்மதி பெரும் மகிழ்ச்சி
மேலும், இது மற்ற மாநிலங்களில் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் வெளியிடப்பட்டது. கோவிட் கட்டுப்பாடுகள் இருந்ததால் பெல் பாட்டம் வெளியீட்டிற்கு முன் அக்ஷய் குமார் பதட்டமாக இருந்தார். இருப்பினும் படம் வெளியான முதல் நாளில் நல்ல தொகையை வசூல் செய்திருப்பது படக்குழுவை நிம்மதி அடைய செய்துள்ளது.