Alia Bhatt: பல கோடிகளில் வீடுகள் வாங்கிக் குவிக்கும் ஆலியா பட்... இதெல்லாம் யாருக்குன்னு தெரியுமா?
மும்பை: பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகையான ஆலியா பட் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தி மட்டும் இல்லாமல் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திலும் ராம் சரண் ஜோடியாக நடித்திருந்தார்.
ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் ஆலியா பட் கடந்தாண்டு ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கோடிக்கணக்கில் வீடுகளை வாங்கிக் குவித்து வருகிறாராம் ஆலியா பட்.
வீடுகளை வாங்கிக் குவிக்கும் ஆலியா பட்
பாலிவுட் ரசிகர்களின் இன்றைய கனவுக் கன்னி ஆலியா பட் தான். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளாக திரையுலகில் அறிமுகமான ஆலியா பட், தற்போது ரன்பீர் கபூரின் மனைவியாக வலம் வருகிறார். ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர்.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், இருவருக்கும் விலையுயர்ந்த சொகுசு கார், வைர, தங்க நகைகள், வாட்ச் என ஏராளமான திருமண பரிசுகளையும் வாரி வழங்கினர். திருமணத்திற்காக கிடைத்த அன்பளிப்புகளால் ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி மகிழ்ச்சியில் திளைத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஆலியா பட்டும் தனது வேட்டையை தொடங்கியுள்ளார். அதன்படி, கடந்த சில மாதங்களாகவே மும்பையின் முக்கியமான பகுதிகளில் வீடுகளை வாங்கிக் குவித்து வருகிறாராம். அதுவும் ஒவ்வொரு வீடும் பல கோடி மதிப்புடையது என சொல்லப்படுகிறது. முதலாவதாக மும்பை பந்த்ரா பகுதியில் பெரிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.
தனது தயாரிப்பு நிறுவனமான Eternal Sunshine Production Pvt மூலமாக தான் ஆலியா பட் இந்த வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆலியா வாங்கியுள்ள இந்த அபார்ட்மெண்ட்டின் விலை 37.8 கோடி ரூபாய் என தகவல்கள் கிடைத்துள்ளன. 2497 சதுர அடி கொண்ட இந்த வீட்டுக்கு, அவர் ஸ்டாம்ப் டியூட்டி மட்டுமே 2.26 கோடி ரூபாய் செலுத்தியுள்ளாராம்.
அதேபோல், மும்பையின் ஜுஹு பகுதியில் இரண்டு பிளாட்கள் வாங்கியுள்ளாராம் ஆலியா பட். இந்த இரண்டு பிளாட்களையும் அவரது அக்கா ஷாஹீன் பட்டுக்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் ஆலியா பட். இந்த வீடுகளின் விலை சுமார் 7.70 கோடி ரூபாய் மதிப்புடையது எனக் கூறப்படுகிறது. 2086 சதுர அடி கொண்ட இந்த வீடுகள், ஆறாவது மாடியில் உள்ளனவாம். மேலும், இந்த பிளாட்களின் ஸ்டாம்ப் ட்யூட்டியாக 30 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார் ஆலியா பட்.
ஆலியாவும் ரன்பீரும் தற்போது பாலி ஹில்லில் உள்ள வாஸ்து என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இங்குதான் கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய பிளாட் வாங்கியுள்ள ஆலியா பட், விரைவில் தனது மகள், கணவர் ரன்பீர் கபூருடன் புதிய வீட்டுக்கு குடிபெயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











