twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குட் நியூசை க்யூட்டா சொன்ன ஆலியா பட்... குவியும் வாழ்த்துக்கள்

    |

    மும்பை : நடிகை ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறது. இதை ஆலியா பட் சொல்லி இருக்கும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    பாலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடிகளில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியும் ஒன்று. பல ஆண்டுகளில் காதல் கிசுகிசுக்களில் அடிபட்டி, கடைசியாக ஒரு வழியாக இருவரும் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.

    ரன்பீர், ஆலியாவின் திருமணம் ஏப்ரல் 14 ம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி மும்பையில் உள்ள ரன்பீரின் வீட்டிலேயே நடைபெற்றது.

    என்ன ஆலியா பட் தேனிலவுக்கு போகலையா?... வைரலாகும் புகைப்படம் !என்ன ஆலியா பட் தேனிலவுக்கு போகலையா?... வைரலாகும் புகைப்படம் !

    ரிலீசிற்கு தயாரான பிரம்மாஸ்திரா

    ரிலீசிற்கு தயாரான பிரம்மாஸ்திரா

    சினிமாவில் இருவரும் பிஸியாக நடித்து வரும் நிலையிலும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் செம பிஸியாக நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா படம் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. இதற்கான டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் பான் இந்தியன் படமாக பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    கர்ப்பத்தை அறிவித்த ஆலியா

    கர்ப்பத்தை அறிவித்த ஆலியா

    இந்த சமயத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்துள்ளார் ஆலியா பட். ஸ்கேன் செய்து கன்ஃபார்ம் செய்த போட்டோவுடன், எங்கள் குழந்தை...விரைவில் வர போகிறது என மிகவும் ஆசையாக க்யூட்டாக குட் நியூசை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆலியா பட். அதோடு ஒரு சிங்க குட்டியுடன் இருக்கும் க்யூட்டான போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    முன்பே சொன்ன ரன்பீர் கபூர்

    முன்பே சொன்ன ரன்பீர் கபூர்

    திருமணமான இரண்டு மாதங்களில் ஆலியா குட் நியூஸ் சொல்லி இருப்பதை அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆலியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரன்பீர் ஏற்கனவே தனது பட பரொமோஷன் விழாவில் குறிப்பிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை தந்துள்ளது. ShamShera பட ப்ரொமோஷனில் குழந்தையை எதிர்பார்த்திருப்பதை ரன்பீர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

     குவியும் வாழ்த்துக்கள்

    குவியும் வாழ்த்துக்கள்

    இதனால் ரன்பீர், ஆலியா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர். ஆலியாவின் இந்த போஸ்ட் செம வைரலாகி, டிரெண்டாகி உள்ளது.

    ஆலியா – ரன்பீரின் அடுத்த பிளான்

    ஆலியா – ரன்பீரின் அடுத்த பிளான்

    ரன்பீர் - ஆலியா நடித்துள்ள பிரம்மாஸ்திரம் படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஆலியா கர்ப்பமடைந்துள்ளதால் அடுத்தகட்ட பிளான் பற்றி ரன்பீரிடம் கேட்ட போது, இந்த சந்தோஷத்தை கொண்டாட நானும் எனது மனைவி ஆலியாவும் சில நாட்கள் வேலைகளில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள போகிறோம். அதற்கு பிறகே பிரம்மாஸ்திரம் படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளை துவக்க போகிறோம் என்றார்.

    English summary
    Alia bhatt, Ranbir Kapoor couple announced that alia was pregnant. She shared a photo of hearing ultrasound when confirming her pregnancy. Fans shared their wishes to this lovable couple.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X