பாலிவுட் நடிகர்களே பதறிடுவாங்களே.. முதல் நாளில் புஷ்பா 2 இந்தியில் மட்டும் இத்தனை கோடி வசூலாம்!
மும்பை: அடாப்ட் சன் ஆஃப் கேரளா, ஆந்திரா என நம்மவூர் நடிகர்கள் புதிய படங்கள் வரும் போது சொல்வார்கள். ஆனால், பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் தமிழ்நாடு அளவுக்கு மற்ற மாநிலங்களில் வசூல் வராது. ஆனால், அந்த வார்த்தையை இனி அல்லு அர்ஜுன் தாராளமாக அடாப்டட் சன் ஆஃப் நார்த் இந்தியா என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தி படங்களின் முதல் நாள் வசூல் சாதனை எல்லாம் தவிடு பொடியாக்கி அல்லு அர்ஜுன் மிரட்டியுள்ளார்.
புஷ்பா 2 படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூலை புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் எப்போது அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், முதல் கட்டமாக இந்தி வசூலை மட்டும் வெளியிடுகிறேன். பார்த்துவிட்டு பலர் வயிறெரியட்டும் என நார்த் இந்தியா பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை வெளியிட்டுள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் ஷாருக்கானின் ஜவான், ரன்பீர் கபூரின் அனிமல் உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூலை காலி செய்து புதிய பெஞ்ச் மார்க்கை படைத்திருக்கிறது.
72 கோடி வசூல்: இந்திய சினிமாவிலேயே இதுவரை எந்தவொரு படமும் முதல் நாளில் இந்தி பெல்ட்டில் வசூல் செய்யாத தொகையான 72 கோடி ரூபாயை முதல் நாளில் புஷ்பா 2 வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை புஷ்பா டீம் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். புஷ்பா 2 படத்தை மொத்தமாக அந்த கங்கம்மா போர்ஷன் தான் காப்பாற்றிய நிலையில், அந்த காட்சியின் போஸ்டரையே தொடர்ந்து படக்குழு பதிவிட்டு ஹைப்பை மேலும், அதிகரித்து வருகின்றனர்.

300 கோடி போஸ்டர் வருமா?: இந்தியில் 72 கோடி வசூல் செய்துள்ள புஷ்பா 2 திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் 250 கோடி முதல் 260 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்தியிலேயே 72 கோடி என்றால் உலகளவில் 300 கோடி முதல் நாள் வசூல் என்கிற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியிட்டாலும் வெளியிடும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
வசூல் வேட்டைக்கு ஆப்பு: நள்ளிரவில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு அல்லு அர்ஜுன் வருகை தந்த நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், தெலங்கானா அரசு புதிய படங்களின் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கேம் சேஞ்சருக்கு சிக்கல்: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், புஷ்பா 2 படத்தால் ஏற்பட்ட பாதிப்புக் காரணமாக கேம் சேஞ்சர் படத்துக்கும் சிக்கல் வரும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. புஷ்பா 2 படத்தின் வசூலுக்கும் ஆப்பு எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











