நேரடி OTT ரிலீசுக்கு ரெடியான சூப்பர்ஸ்டார் படம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. என்ன படம் தெரியுமா?
மும்பை: பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படமொன்று நேரடியாக OTT தளத்தில் ரிலீசாக உள்ள தேதியை வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video
அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து தான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
77 வயதாகும் அமிதாப் பச்சன் சும்மா வரிசை கட்டி பல படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தனது நடிப்பை இந்த வயதிலும் நடித்து பாலிவுட் திரையுலகை திணறடித்து வருகிறார்.

OTT பிரச்சனை
நாடு முழுவதும் நேரடியாக புதுப் படங்களை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தியேட்டர் ஓனர்களின் எதிர்ப்புகளையும் மீறி, பல புதிய படங்கள் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு OTT தளங்களில் ரிலீஸ் செய்ய தயார் நிலையில் இருக்கின்றன.

புதுப்படங்கள்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில தமிழ் படங்கள் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் படங்களான குலாபோ சிட்டாபோ, லக்ஷ்மி பாம், வித்யா பாலனின் சகுந்தலா தேவி - தி ஹியூமன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல படங்கள் விரைவில் நேரடியாக ஆன்லைனில் வெளியாகப் போகின்றன.

அமிதாப் படம்
அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக பாலிவுட் பிதாமகர் அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகி இருக்கும் குலாபோ சிட்டாபோ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை சுஜித் சர்கார் இயக்கி உள்ளார்.

வித்தியாசமான தோற்றத்தில்
சினிமாவில் 1969ல் நடிக்க வந்த அமிதா பச்சன் கடந்த 51 ஆண்டுகளாக எத்தனையோ பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். வயதான காலத்திலும், பிங்க், பாட்லா, பிகு, தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், சைரா நரசிம்ம ரெட்டி என பல படங்களில் சமீப காலமாக நடித்துத் தள்ளி வரும் நடிகர் அமிதாப் பச்சன் கைவசம் தற்போது 3 புதிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. சுஜித் சர்கார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் நீண்ட வெண் தாடியுடன், பழுத்த கிழவர் தோற்றத்தில் நடித்துள்ளார் அமிதாப்.


Click it and Unblock the Notifications











