Amitabh Bachchan Arrested: என்ன சொல்றீங்க.. அமிதாப் பச்சனை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா? ரசிகர்கள் ஷாக்!

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் போலீஸ் ஜீப் அருகே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'arrested' என பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பாலிவுட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

இந்திய சினிமாவின் இணையற்ற சூப்பர்ஸ்டாராக இந்த வயதிலும் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.

சமீபத்தில், ஹெல்மட் அணியாமல் பைக் ஒன்றில் லிஃப்ட் கேட்டு அமிதாப் பச்சன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இப்படியொரு போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Amitabh Bachchan arrested post shocks fans

அமிதாப் பச்சன் கைதா?: பாலிவுட்டின் பிக் பி என கொண்டாடப்படும் அமிதாப் பச்சன் 80 வயதை கடந்த நிலையிலும் இன்னமும் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸ் ஜீப் அருகே நிற்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு 'arrested' என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சனின் புதிய படத்தின் போஸ்டராக இது இருக்கலாம் என்றும் படத்திற்கான ப்ரமோஷன் யுக்தியாகவே அமிதாப் பச்சன் இப்படியொரு போஸ்ட் போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Amitabh Bachchan arrested post shocks fans

வெங்கட் பிரபு யுக்தி: சமீபத்தில், கஸ்டடி படத்தின் ப்ரமோஷனுக்காக வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டதாக சோஷியல் மீடியாவில் பரபரப்பு கிளப்பப்பட்டதை போலவே தற்போது அமிதாப் பச்சனும் இன்ஸ்டாவில் இப்படியொரு போஸ்ட் போட்டு படத்தை ப்ரமோஷன் செய்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஹெல்மட் அணியாமல்: சமீபத்தில் அமிதாப் பச்சன் ஹெல்மட் அணியாமல் ரசிகர் ஒருவர் பைக்கில் ஏறிச் சென்ற புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்து இருந்தார்.

ஆனால், பைக் ஓட்டி சென்றவரும் ஹெல்மட் அணியவில்லை. பின்னாடி லிப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சனும் ஹெல்மட் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மும்பை போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான நடவடிக்கையை டிராபிக் போலீஸார் நிச்சயம் எடுப்பார்கள் என பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், அதனை ட்ரோல் செய்யும் விதமாக அமிதாப் பச்சன் இப்படியொரு நக்கல் போஸ்ட்டை போட்டுள்ளாரா? என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 7 படங்களில் நடித்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு கனாபத், கூமர், தி உமேஷ் க்ரோனிக்கல்ஸ், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே, பட்டர்ஃபிளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X