Akshay Kumar - ஓஎம்ஜி 2 படத்துக்கு எதிர்ப்பு.. அக்‌ஷய் குமார் உருவ பொம்மை எரிப்பு

மும்பை: Akshay Kumar (அக்‌ஷய் குமார்) அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் ஓஎம்ஜி 2 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது.

An effigy of Akshay Kumar was burnt in protest against the film OMG 2

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், "ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

பிரதமருடன் பேட்டி: இதற்கிடையே நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி எடுத்தார். அதனையடுத்து அவர் பாஜகவின் ஆதரவாளரா என பலர் கேள்வி எழுப்பினர். இப்படி அரசியல் சாயம் அவருக்கு பூசப்பட்டாலும் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

ஓஎம்ஜி 2: அக்‌ஷய் குமாரின் நடிப்பில் கடைசியாக செல்ஃபி படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதற்கு முன்னதாக வெளியான ரக்‌ஷாபந்தன், ராம் சேது உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கின. இதன் காரணமாக அவருக்கு தற்போது ஒரு அவசியமான ஹிட் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்திருக்கும் ஓஎம்ஜி 2 படம் வெளியாகியிருக்கிறது.

சர்ச்சை: இந்நிலையில் படத்துக்கு சில வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது பாலியல் கல்வி தொடர்பான இந்தப் படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு முன் நின்று இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமின்றி படத்தை திரையிடக்கூடாது என சொல்லியும் அக்‌ஷய் குமாரின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படத்துக்கு எதிராகவும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X