ஆர்யன் கான் போதை பொருள் வழக்கு.. சம்மன் அனுப்பிய என்சிபி... ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த வாரிசு நடிகை!

மும்பை: ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் பிரபல வாரிசு நடிகையான அனன்யா பாண்டே போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட எம்ப்ரஸ் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3 ஆம் தேதி மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆர்யன் கான் போதை பொருள் குறித்து நண்பர்களுடன் நடத்திய வாட்ஸ்அப் சாட்டின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது மும்பை ஆர்த்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை மீண்டும் விசாரணை

நாளை மீண்டும் விசாரணை

ஆர்யன் கானுக்கு இதுவரை இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கானின் வாட்ஸ் அப் சாட் அடிப்படையில் பிரபல நடிகையான அனன்யா பாண்டேயிடம் மும்பை போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜரானார்

விசாரணைக்கு ஆஜரானார்

கடந்த வாரம் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அவரது போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருமுறை அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜரானார்.

அது ஒரு ஜோக்

அது ஒரு ஜோக்

அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது ஆர்யன் கான், வாட்ஸ் அப் சாட்டில் கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதையும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என அனன்யா பாண்டே பதில் அளித்தது குறித்தும் போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அது ஒரு ஜோக், வேறு ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தார் அனன்யா பாண்டே.

அது ஒரு ஜோக்

அது ஒரு ஜோக்

அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது ஆர்யன் கான், வாட்ஸ் அப் சாட்டில் கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதையும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என அனன்யா பாண்டே பதில் அளித்தது குறித்தும் போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அது ஒரு ஜோக், வேறு ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தார் அனன்யா பாண்டே.

விசாரணைக்கு ஆஜராகவில்லை

விசாரணைக்கு ஆஜராகவில்லை

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இன்று அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராகவில்லை. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X