twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூகவலைத்தளங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்… பாலிவுட் பிரபலம் அட்வைஸ் !

    |

    மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் அனில் கபூர், சமூகவலைத்தளங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

    பின்ச் சீஸன்-2 என்கிற அரட்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனில் கபூர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    ப்பா.. பிக்பாஸ் தர்ஷனா இது.. 4 வாரத்துல இப்படி ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனா... மிரள விடும் போட்டோ! ப்பா.. பிக்பாஸ் தர்ஷனா இது.. 4 வாரத்துல இப்படி ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனா... மிரள விடும் போட்டோ!

    இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 15ந் தேதி, க்யூபிளே யூடியூப், ஜீ5 மற்றும் மைஎஃப்எம்மில் ஒளிபரப்பப்படும். இந்த வீடியோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

    முன்னணி நடிகர்

    முன்னணி நடிகர்

    பாலிவுட்டில் பிரபல நடிகர் அனில் கபூர். இவர் நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நடிகர் என பல பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய சகோதரர் தான் போனி கபூர் இவரும் ஒரு பிரபல தயாரிப்பாளர் ஆவார். இன்னொரு சகோதரரான சஞ்சை கபூரும், மகள் சோனம் கபூரும் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.

    40 ஆண்டுகால பயணம்

    40 ஆண்டுகால பயணம்

    அனில் கபூர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரைத்துரையில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1979ம் ஆண்டு Hamare Tumhare என்ற திரைப்படத்தில் நடித்தார். 1980 ஆம் ஆண்டு பாபு இயக்கிய தெலுங்கு திரைப்படமான வம்ச விருக்ஷத்தில் முன்னணி நடிகராக நடித்தார். பின்னர் மணிரத்னம் இயக்கிய பல்லவி அனு பல்லவி படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்.

    இணையத்தில் ஆக்டிவ்

    இணையத்தில் ஆக்டிவ்

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனில் கபூர். தான் உடற்பயிற்சி செய்யும் காணொலி, குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் பின்ச் சீஸன்- 2 என்கிற அரட்டை நிகழ்ச்சியில் அனில் கபூர் பங்கேற்றார். இதை இயக்குநர், நடிகர் அர்பாஅஸ் கான் தொகுத்து வழங்குகிறார்.

    பொறுப்புடன் இருங்கள்

    பொறுப்புடன் இருங்கள்

    இந்நிகழ்ச்சி க்யூப்ளே யூடியூப், ஜீ5 மற்றும் மை எஃப் எம் தளங்களில் செப்டம்பர் 15ந் தேதி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், சமூக ஊடகத்தின் சக்தியைக் குறித்தும், ரசிகர்களுக்கான அறிவுரை என்ன சொல்வீர்கள் என்றும் அனில் கபூரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கபூர், பொறுப்பற்ற முறையில் செயல்படாதீர்கள். சமூக ஊடகத்தை நேர்மறையாகப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் நேர்மறை சிந்தனைகளை, அன்பைப் பரப்ப அது ஒரு சிறந்த தளமாக இருக்கும். எதிர்மறை விஷயங்களைப் பேசி, பரபரப்புக்காக அதைப் பயன்படுத்தாதீர்கள்.

    அமைதியாக இருங்கள்

    அமைதியாக இருங்கள்

    ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு போதுமான அறிவு இல்லாதபோது, நீங்கள் ஏன் அதைப் பற்றி கருத்து கூறுகிறீர்கள்? அமைதியாக இருந்து உங்கள் சொந்த வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருங்கள் என்றார்.

    English summary
    Anil kapoor said that, social media positively as it can be a great platform, Don't try to use it negatively and exploit it for sensationalism.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X