அந்த நடிகர் வீட்டு பக்கத்துல 14 கோடிக்கு வீடு வாங்கிய அனிமல் பட நடிகை.. என்ன ரூட்டு இப்படி போகுது!
மும்பை: 30 வயதான இளம் நடிகை திரிப்தி திம்ரி கடந்த ஆண்டு சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராஷ்மிகா மந்தனாவை விட அதிக கவர்ச்சி காட்டி நடித்து இளைஞர்களை தன் பக்கம் வளைத்து போட்டார்.
ராஷ்மிகா மந்தனாவை விட நேஷனல் கிரஷ் இவர்தான் என ரசிகர்கள் திரிப்தி திம்ரியை கொண்டாட ஆரம்பித்தனர். ஒரே படத்தின் மூலம் ஓஹோ என வாழ்க்கை வந்தது போல அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் திரிப்தி திம்ரிக்கு குவிந்துள்ளன.

இந்நிலையில், அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் கொடுத்து மும்பையின் முக்கிய பகுதியான ஆந்திராவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார் திரிப்தி திம்ரி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனிமல் படத்தில் ஆபாசமாக: ரன்பீர் கபூர், ராஷ்மிக மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியான அனிமல் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக இடைவேளையின் போது வந்த திரிப்தி திம்ரி அந்த படத்தில் ரன்பீர் கபூருடன் படுக்கையறை காட்சிகளில் ஆடைகள் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்தும் முத்தக் காட்சிகளில் எல்லை மீறி நடித்தும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
யாரு இந்த திரிப்தி திம்ரி?: 2017 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மாம் படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் திரிப்தி திம்ரி. போஸ்டர் பாய்ஸ், லைலா மஜ்னு, புல் புல், காலா, அனிமல் உள்ளிட்ட பல படங்களில் இவர் இதுவரை நடித்துள்ளார். அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட் நியூஸ், புல் புலாயா 3, ததக் 2 என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். எல்லா தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸை வாங்கி போட்ட நிலையில் அதை வைத்து உருப்படியாக பெரிய வீடு ஒன்றை வாங்கிவிடலாம் என்கிற எண்ணத்தில் சமீபத்தில் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக கூறுகின்றனர்.
14 கோடி ரூபாய் பங்களா: அனிமல் படத்தில் நடிக்கவே திரிப்தி திம்ரிக்கு அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கும். இந்நிலையில், 14 கோடி ரூபாய்க்கு மும்பையில் உள்ள முக்கியமான பிரபலங்கள் வசிக்கும் பகுதியான பாந்த்ரா மேற்கில் உள்ள ஷெர்லி ராஜன் சாலையில் பழமையான பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
ஜான் ஆபிரகாம் வீட்டருகே: 2,226 சதுர அடி கொண்ட இடத்தில் 2,194 சதுர அடிக்கு கட்டப்பட்ட பங்களா வீட்டை வாங்கி புதுப்பிக்கும் முயற்சியில் திரிப்தி திம்ரி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் வீட்டின் அருகே இவர் இந்த வீட்டை வாங்கியுள்ள நிலையில், பாலிவுட்டில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. அனிமல் முதல் பாகத்தை விட அனிமல் 2 படத்தில் இவருக்கு ஏகப்பட்ட காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. புல் புலாயா 2வில் கியாரா அத்வானி நடித்த நிலையில், அதன் 3ம் பாகத்தில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது. புஷ்பா 2 படத்தின் குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடப் போவதும் இவர் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











