Animal Box Office: லியோ வசூலை நெருங்க கூட முடியல.. பதானை பந்தாடிய அனிமல்.. முதல் நாள் வசூல் இதோ!

மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஓபனிங் இருந்த நிலையில், நல்ல வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் என படத்தின் லெந்த் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், குடும்பங்கள் தியேட்டர் பக்கம் வரவே இல்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை அனிமல் படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Animal enters 100 crore club in Day 1 Box Office collection

கலவையான விமர்சனம்: அர்ஜுன் ரெட்டி இயக்குநரின் அடுத்த படைப்பான அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படத்தில் ரன்பீர் கபூரின் பர்ஃபார்மன்ஸை பாராட்டி வரும் ரசிகர்கள் இரண்டாம் பாதி சொதப்பி விட்டது என நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். படத்தின் நீளம் தான் மிகப்பெரிய எதிரி என்றும் கூறி வரும் நிலையில், முதல் வாரத்தை தாண்டி படம் ஓடினால் தான் வெற்றிப் படமாக கருதப்படும் என்றும் கூறுகின்றனர்.

வசூல் வேட்டை: ஆனால், விமர்சனங்களை கடந்து வசூல் ரீதியாக பார்த்தால் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி வசூலை ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே வேகத்தில் இன்னும் ஒரு வாரம் படம் ஓடுமா என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது.

பதான், கதர் 2வை முறியடித்தது: இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை அனிமல் படத்தால் முறியடிக்க முடியவில்லை. ஆனால், பதான் மற்றும் கதர் 2 படங்களின் முதல் நாள் வசூலை அனிமல் முறியடித்துள்ளது. இந்தியில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 52 கோடி ரூபாய் வசூலையும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான நிலையில், வெறும் 8 கோடி ரூபாயை வசூல் செய்து 60 கோடி ரூபாயை இந்தியாவிலும், ஓவர்சீஸில் 40 கோடி என ஒட்டுமொத்தமாக 100 கோடி வசூலை ஈட்டி உள்ளது.

லியோ வசூலை சலார் முறியடிக்குமா?: விஜய்யின் லியோ படம் தான் இந்த ஆண்டு முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது. பிரபாஸின் சலார் அதனை முறியடிக்குமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X