Animal Box Office: அசுரத்தனமான வசூல் வேட்டை.. அனிமல் படத்தின் 2ம் நாள் வசூல் இத்தனை கோடியா?

மும்பை: அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது ஒட்டுமொத்த கிறுக்குத்தனத்தையும் கற்பனை திறனையும் கலந்து போட்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனாவை வைத்து உருவாக்கிய அனிமல் திரைப்படம் முதல் நாளை விட 2ம் நாளில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்திற்கு அதன் லெந்த் பிரச்சனை என விமர்சிக்கப்பட்டாலும், ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையிலும், முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் என விமர்சனங்கள் குவிந்தாலும் அனிமல் வசூல் வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை.

Animal enters 200 crore club in Day 2 Box Office collection

அனிமல் இல்லை அரை லூசு: அனிமல் படத்தை ரசிகர்கள் ரன்பீர் கபூரின் ஆக்ரோஷ நடிப்புக்காகவும், ராஷ்மிகா மந்தனாவின் பல பிட்டு சீன்களுக்காகவும் கொண்டாடி வரும் நிலையில், அனிமல் இல்லை அது அரை லூசு என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.

வசூல் வேட்டை: ஆனால், விமர்சனங்களை கடந்து வசூல் ரீதியாக பார்த்தால் முதல் நாளிலேயே உலகளவில் 116 கோடி வசூலை ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் கடந்து சாதனை படைத்த நிலையில், இரண்டாம் நாள் மேலும் அதன் வசூல் அதிகரித்துள்ளது.

200 கோடி பாக்ஸ் ஆபிஸ்: இரண்டாம் நாள் இந்தியாவிலேயே 66 கோடி வசூலை ஈட்டிய அனிமல் திரைப்படம் உலகளவில் 122 கோடி வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 238 கோடி வசூலை வெறும் 100 கோடி பட்ஜெட்டில் உருவான அனிமல் அள்ளி மெகா ஹிட் அடித்திருப்பதாக கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று அதன் வசூல் மேலும், அதிகரிக்கும் என பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X