தொழிலதிபருடன் டேட்டிங் செய்யும் அனிமல் பட நடிகை?.. தீயாக பரவும் திருமண புகைப்படங்கள்!
மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்தில் நடித்த மற்றொரு இளம் நடிகை திரிப்தி டிம்ரி தற்போது தொழிலதிபருடன் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பரபரப்பு கிளம்பி உள்ளது.
புல்புல், காலா உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானவர் திரிப்தி டிம்ரி. ஆனால், அதில் எல்லாம் கிடைக்காத பாப்புலாரிட்டி அனிமல் படத்தில் நடித்த நிலையில், ஓவர்நைட்டில் ஒபாமா ஆனது போல நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவையே ஓவர்டேக் செய்து புதிய சென்சேஷனல் நடிகையாக மாறி விட்டார்.

திரிப்தி டிம்ரி: ராஷ்மிகா மந்தனா தான் அனிமல் படத்தின் நாயகி என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் ரன்பீர் கபூர் திரிம்தி திம்ரியுடன் சேர்ந்துவிடும் காட்சிகள் படம் பார்த்தவர்களுக்கே செம ட்விஸ்ட்டாக அமைந்தது. பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வரும் 29வயது திரிப்தி டிம்ரி ஏற்கனவே நெட்பிளிக்ஸில் வெளியான பேய் படமான புல்புல் மூலம் பிரபலமானவர்.
எகிறிய ஃபாலோயர்ஸ்: அனிமல் படத்திற்கு முன்பாக வெறும் சில லட்ச ஃபாலோயர்களை கொண்டிருந்த திரிப்தி டிம்ரி தற்போது 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார். அந்த அளவுக்கு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்தில் எல்லை மீறிய ஆபாசக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அனுஷ்கா ஷர்மா அண்ணனுடன்: கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவின் அண்ணன் கர்னேஷ் ஷர்மா தயாரிப்பில் வெளியான புல் புல் மற்றும் காலா உள்ளிட்ட ஓடிடி படைப்புகளில் நடித்து வந்த போது கர்னேஷை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. பின்னர் இருவரும் பிரேக்கப் செய்துக் கொண்டதாகவும் தகவல்கள் பரவின.
தொழிலதிபருடன் டேட்டிங்: இந்நிலையில், தற்போது மாடலாக இருந்து தொழிலதிபராக மாறியுள்ள சாம் மெர்சன்ட் என்பவருடன் திரிப்தி டிம்ரி டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பரபரப்பு ஒன்று தொற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாம் மெர்சன்ட் உடன் இணைந்து ஏகப்பட்ட போட்டோக்களில் மிகவும் நெருக்கமாக திரிப்தி டிம்ரி போஸ் கொடுத்திருப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை திரிப்தி டிம்ரி தான் யாரையுமே காதலித்து வருவதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.


Click it and Unblock the Notifications











