ஆத்தி.. அனிமல் படத்தின் பிரம்மாண்ட வெற்றி.. 8 கோடிக்கு அந்த சொகுசு காரை வாங்கிய ரன்பீர் கபூர்!
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பிரம்மாஸ்திரா படத்தை 5 ஆண்டுகளாக நடித்தே வெற்றியை ருசிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால், டோலிவுட் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஒரே படத்தைக் கொடுத்து அவரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவே கடந்த ஆண்டு மாற்றி விட்டார். மேலும், பிலிம்ஃபேர் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகள் ரன்பீர் கபூரின் நடிப்புக்கு குவிந்தன.
அனிமல் படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கப் போகிறார். இந்நிலையில், பாலிவுட்டின் செல்லப் பிள்ளையான ரன்பீர் கபூர் சுமார் 8 கோடிக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பது பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

அதன் வீடியோ காட்சிகள் தான் தற்போது பாலிவுட்டில் சூடான டாப்பிக்காக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.ஏற்கனவே ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா பட் இருவரிடமும் ஒரு டஜன் கார்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
8 கோடிக்கு சொகுசு கார்: பிரபலங்கள் சொகுசு பங்களா மற்றும் சொகுசு கார்களை வாங்கி சொத்துக்களை சேர்த்து வருகின்றனர். 4 கோடி மதிப்பில் ஏற்கனவே சில கார்களை வைத்திருக்கும் ரன்பீர் கபூர் தற்போது அதை விட டபுள் மடங்கு விலை கொடுத்து சுமார் 8 கோடி மதிப்புடைய கருப்பு நிற Bentley Continental கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காரை எடுத்துக் கொண்டு மும்பையில் உள்ள பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ரா நகரில் ரன்பீர் கபூர் சோலோவாக ரவுண்டு அடித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஏகப்பட்ட கார்கள்: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஒரு தீவிர கார் பிரியர் என்றே சொல்லலாம். அவரிடம் ஏற்கனவே 3.27 கோடி மதிப்பில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வாங்கியிருந்தார். அதற்கு முன்னதாக, 1.71 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8 எல் கார், 2.28 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் ஏஎம்ஜி ஜி - 63, 2.72 கோடி மதிப்புள்ள ஆடி ஆர்8 உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்திருக்கிறார். நடிகை ஆலியா பட் தனியாக 2.8 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், 70 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ6, 1.8 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் இன்னும் சில ஆடி வகையறா கார்களை வைத்திருக்கிறாராம்.
அனிமல் தந்த வெற்றி: 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். அனிமல் படம் 900 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கியுள்ளார். அடுத்ததாக பிரம்மாண்டமாக 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ராமாயணம் படத்துக்கு மேலும், சம்பளத்தை அதிகரித்து விடுவார் என்று கூறுகின்றனர். பாலிவுட்டில் கான் நடிகர்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ரன்பீர் கபூர் தான் மாஸ் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் படங்களை எல்லாம் இவர் அசால்ட்டாக ஓரம் கட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











