இரண்டு கான்கள் இணையும் படத்தில் இவர் கெஸ்ட் ரோல் பண்றாரா?...அப்போ படம் வேற லெவல் ஹிட் தான்

மும்பை :தீனா,ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெற்றி கொடி நாட்டியவர்.

பொதுவாக முருகதாஸ் படம் என்றாலே சோஷியல் மெசேஜுடன் அதிரடி ஆக்ஷன், த்ரில்லிங் நிறைந்ததாக இருக்கும். இதனாலேயே இவர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்தியில் கஜினி, துப்பாக்கி படங்களை ரீமேக் செய்து மாஸ்ஹிட் கொடுத்தார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. விஜய் நடித்த சர்கார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Another top hero to play camero role in A.R.Murugadoss film with Shahruku khan and Salman Khan

ஆனால் தமிழ், தெலுங்கில் இவர் இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இதனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.

சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கோச்சடையான் ஸ்டைலில் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் டாப் ஹீரோக்களான ஷாருக்கான் - சல்மான் கான் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக இது தான் டிரெண்டாகி வருகிறது. முருகதாஸ் சொன்ன கதை இரண்டு ஸ்டார்களுக்கும் பிடித்து விட்டதால் உடனடியாக ஓகே சொல்லி விட்டதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த படம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையிலேயே உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்கான் - சல்மான் கான் இணையும் படத்தில் அமீர்கான் கேமிரோ ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி பட ரீமேக்கில் அமீர்கான் நடித்திருந்தார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அமீர்கான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த புதிய தகவல் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி, கோலிவுட் ரசிகர்களையும் குஷிப்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X