தொடர்ந்து மிரட்டும் கொரோனா.. பிரபல நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி!

By

மும்பை: பிரபல நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டாவது பரிசோதனையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Anupam Kher’s mother, brother, sister-in-law test positive for Covid-19

இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியில் ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், தமிழில், பிரபுதேவாவின் வி.ஐ.பி. படத்தில் நடித்திருந்தார்.

இவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தும் லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X