மகளின் போட்டோவை பகிர வேண்டாம்… அனுஷ்கா சர்மா வேண்டுகோள் !
மும்பை: இதுநாள் வரை வெளியே காட்டப்படாத அனுஷ்கா - விராட் தம்பதியின் மகள் புகைப்படம் 'லீக்' ஆனதால் நெட்டிசன்கள் மத்தியில் காரசார மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்தது.
இதுவரை அவர்கள் தங்களது குழந்தையின் முகத்தை பொதுவெளியில் காட்டாத நிலையில், தற்போது வாமிகாவின் புகைப்படம் வைரலாகி வருவதால், தங்கள் மகளின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அனுஷ்கா ஷர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பாலிவுட் நடிகையும் தனது காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வாமிகா என பெயர்வைத்துள்ளனர்.

விரும்பவில்லை
விராம் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் இதுவரை அவர்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டது இல்லை. ஊடகத்திலோ, சமூக வலைத்தளத்திலோ தங்கள் மகளின் புகைப்படம் வெளியாவதை விரும்ப வில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

வைரலான புகைப்படம்
இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி அரைசதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். மனைவி அனுஷ்கா சர்மாவும் தனது மகள் வாமிகாவுடன் நின்ற படி, கோலியை உற்சாகப்படுத்தினார். நேரலையில் இந்த காட்சிகள் வெளியானது. இதையடுத்து, வமிகாவின் புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

பகிர வேண்டாம்
இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில், "வணக்கம் தோழர்களே! எங்கள் மகளின் படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு தற்போது அது வைரலாகி வருகிறது. கேமரா அங்கு இருந்தது எங்களுக்கு தெரியவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். நாங்ககள் முன்பே கூறியது போல வாமிகாவின் புகைப்படத்தை க்ளிக் செய்யப்படாமல், பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம் என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











