Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிரேக்கப்லாம் இல்லை.. வதந்தியை பரப்பாதீங்க.. வாழ விடுங்க.. அதிரடியாக போஸ்ட் போட்ட அர்ஜுன் கபூர்!
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் நடிகை மலைகா அரோரா இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர் என திடீரென கிளம்பிய வதந்தியால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு கிளம்பியது.
கடந்த ஆண்டு இறுதியில் தான் அமீர்கான் தனது விவாகரத்தை அறிவித்தார். நடிகை சமந்தாவின் விவகாரத்தும் நாட்டை உலுக்கியது.
இந்நிலையில், அடுத்த பிரேக்கப்பா என நினைத்த ரசிகர்களுக்கு அது வெறும் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அர்ஜுன் கபூர்.
பால்வண்ண
நிலவெடுத்து
செய்த
சிலை
போல
உள்ள
நடிகை
லாஸ்லியா!

பிரேக்கப் வதந்தி
பிரபல பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூரும் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் பிரிந்து விட்டதாக திடீரென ஒரு வதந்தி நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், அது வெறும் வதந்தி மட்டுமே என நடிகர் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.

அர்ஜுன் கபூர் ஆவேசம்
நடிகை மலைகா அரோராவும் நடிகர் அர்ஜுன் கபூரும் பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தேவையில்லாமல் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் அர்ஜுன் கபூர் அதிரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலைகா அரோராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மலைகாவும் மறுத்துவிட்டார்
அர்ஜுன் கபூர் இப்படியொரு போஸ்ட் போட்ட நிலையில், அதற்கு ஹார்ட் எமோஜியை பதிவு செய்து நடிகை மலைகா அரோராவும் இது முற்றிலும் வதந்திதான் என்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் இருவரும் இணைந்து ரசிகர்களுக்கு இது தொடர்பான வெளிப்படையான அறிவிப்பை வெளியிடுவார்களா அல்லது தங்கள் திருமண தேதியை அறிவிப்பார்களா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வம்.

12 வருட இடைவெளி
சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த நடிகை மலைகா அரோரா தன்னை விட 12 வருடம் இளம் வயது நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருவதே பாலிவுட்டில் பலருக்கும் பெரிய பொறாமையை கிளப்பியது. அடிக்கடி இதுபோன்ற பிரேக்கப் வதந்திகள் இருவரது வயது வித்தியாசத்தை முன் வைத்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்திக் கொண்ட மலைகா
ஆனால், இப்போது இந்த வதந்தி இப்படி விஸ்வரூபம் எடுக்க காரணமே நடிகை மலைகா அரோரா தனது காதலர் அர்ஜுன் கபூர் உடன் இல்லாமல் தனிமைப்படுத்திக் கொண்டது தான் என்கின்றனர். மேலும், மலைகாவின் உறவினர் வீட்டுக்கு வந்த அர்ஜுன் கபூர் அருகே உள்ள மலைகாவின் வீட்டுக்குச் செல்லாதது தான் இப்படியொரு பிரேக்கப் சந்தேகத்தை கிளப்பியது.

18 வயதில் மகன்
நடிகர் ஷாருக்காவின் உயிரே படத்தில் இடம்பெற்ற "தக்க தையா" பாடலுக்கு ரயிலில் கவர்ச்சி ஆட்டம் போட்டு பிரபலமான மலைகா அரோரா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அனல் கிளப்பி வருகிறார். அர்பாஸ் கானுக்கும் மலைகாவுக்கும் பிறந்த அர்ஹானுக்கு 18 வயதாவது குறிப்பிடத்தக்கது.