எல்லாம் போதும்.. 50 வயது நடிகையை பிரிந்த இளம் நடிகர்.. என்ன பிரச்னை?. அதிர்ச்சியில் பாலிவுட்
மும்பை: பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருந்தது அர்ஜுன் கபூர் - மலைகா அரோரா ஜோடி. அர்ஜுன் கபூர் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மலைகா அரோராவை தீவிரமாக காதலித்துவந்தார். எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே சென்றனர். இந்தச் சூழலில் தானும், மலைகா அரோராவும் பிரிந்துவிட்டதாக அர்ஜுன் கபூர் ஓபனாக அறிவித்திருப்பது பாலிவுட் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மணிரத்னம் இயக்கிய படம் தில் சே. தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற தைய தையா பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் பாடலுக்கு மலைகா அரோரா நடனம் ஆடியிருந்தார்.

முதல் திருமணம்: அதனைத் தொடர்ந்து பல பாடல்களுக்கு நடனமாடியும், படங்களிலும் நடித்த அவர் அர்பாஸ் கான் என்பவரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், அர்பாஸ் கான் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடையவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2017ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. அதனையடுத்து மலைகா அரோரா சிங்கிளாக இருந்தார்.
காதலில் விழுந்த மலைகா: அர்பாஸ் கானை பிரிந்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூரின் முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலில் விழுந்தார் மலைகா அரோரா. அர்ஜுன் கபூரைவிட மலைகா அரோரா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இரண்டு பேருமே அதைப்பற்றி கவலைகொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்துவருகின்றனர்.
மலைக்கா அரோரா கர்ப்பம்: இந்தச் சூழலில் மலைகா அரோரா கர்ப்பமாக இருப்பதாகவும், சமீபத்தில் அர்ஜுன் கபூரும், மலைக்காவும் லண்டன் சென்றபோது தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதுகுறித்து இருவரும் பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்துவந்தனர். மேலும் மலைகாவைவிட அர்ஜுன் கபூர் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இளையவர் என்பதால் மலைகா இந்த விவகாரத்தில் பெரும் விமர்சனத்தை சந்தித்துக்கொண்டிருந்தார்.
மௌனம் கலைத்த அர்ஜுன் கபூர்: அதனையடுத்து அவ்விவகாரம் குறித்து பேசியிருந்த அர்ஜுன் கபூர், “எதிர்மறையான விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் பரவுகின்றன என நினைக்கிறேன். எதிர்மறையான விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் பரவுகின்றன என நினைக்கிறேன்.எங்களைப் பற்றி முக்கியமான விஷங்களை எழுதும்போது எங்களிடம் கேளுங்கள். நீங்களாக யூகித்து எழுதக்கூடாது” என்றெல்லாம் பேசியிருந்தார்.
லவ் பிரேக் அப்: இந்நிலையில் மும்பையில் இருக்கும் சிவாஜி பார்க்கில் தீபாவளி கொண்டாட்டத்தில் அர்ஜுன் கபூர் கலந்துகொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த ரசிகர்கள், மலைகா மலைகா என்று கத்தினர். அதனை கேட்ட அர்ஜுன் கபூரோ, 'தற்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். ரிலாக்ஸ் ஆகுங்கள்’ என்று கூறினார். அதனைக் கேட்ட அங்கிருந்த ரசிகர்கள் வாயடைத்து போயினர். இதற்கிடையே அவர்கள் இரண்டு பேரும் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டதாகவும்; அதற்கு முக்கிய காரணமாக அவர்களது வயதுதான் இருந்தது என்றும் பாலிவுட் மீடியாக்களில் தகவல் கசிய ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications