Arjun Kapoor - மலைகா அரோரா கர்ப்பமாக இருக்கிறாரா?.. அர்ஜுன் கபூர் கொடுத்த விளக்கம்

மும்பை: Arjun Kapoor (அர்ஜுன் கபூர்) மலைக்கா அரோரா கர்ப்பமாக இருக்கிறார் என்று வெளியான தகவல் குறித்து அர்ஜுன் கபூர் காட்டமாக விளக்கமளித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய படம் தில் சே தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற தைய தையா பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் பாடலுக்கு மலைகா அரோரா நடனம் ஆடியிருந்தார்.

Arjun Kapoor explains about malaika arora pregnant

முதல் திருமணம்: அதனைத் தொடர்ந்து பல பாடல்களுக்கு நடனமாடியும், படங்களிலும் நடித்த அவர் அர்பாஸ் கான் என்பவரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், அர்பாஸ் கான் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடையவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2017ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. அதனையடுத்து மலைக்கா அரோரா சிங்கிளாக இருந்தார்.

காதலில் விழுந்த மலைக்கா: அர்பாஸ் கானை பிரிந்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூரின் முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலில் விழுந்தார் மலைகா அரோரா. அர்ஜுன் கபூரைவிட மலைகா அரோரா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இரண்டு பேருமே அதைப்பற்றி கவலைகொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்துவருகின்றனர்.

மலைக்கா அரோரா கர்ப்பம்: இந்தச் சூழலில் மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாகவும், சமீபத்தில் அர்ஜுன் கபூரும், மலைக்காவும் லண்டன் சென்றபோது தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதுகுறித்து இருவரும் பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்துவந்தனர்.

Arjun Kapoor explains about malaika arora pregnant

மௌனம் கலைத்த அர்ஜுன் கபூர்: இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கும் அர்ஜுன் கபூர், "எதிர்மறையான விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் பரவுகின்றன என நினைக்கிறேன். எங்களைப் பற்றி முக்கியமான விஷயங்களை எழுதும்போது எங்களிடம் கேளுங்கள். நீங்களாக யூகித்து எழுதக்கூடாது" என்றார்.

சர்ச்சை புகைப்படம்: இதற்கிடையே இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மலைகா அரோரா. சில நாட்களுக்கு முன்பு அவர் பகிர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது தனது வீட்டில் அர்ஜுன் கபூர் துணி எதையும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஒருவரின் அந்தரங்கமான புகைப்படத்தை எப்படி மலைக்கா அரோரா பொதுவெளியில் பகிரலாம் என கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X