Don't Miss!
- Technology
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
- News
பாவமே.. பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சிக்காக.. 10 கி.மீ சுற்றளவுக்கு ஹோட்டல்களில் "நான்-வெஜ்" நஹி!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என்னது இந்த டி-சர்ட் இவ்வளவு காஸ்ட்லியா? அர்ஜுன் கபூரின் ஃபேஷன் உடையின் விலை என்ன தெரியுமா?
மும்பை: தி நகரில் 100 ரூபாய்க்கு டி-சர்ட் வாங்கிப் போட்டுக் கொண்டு சுற்றும் இளைஞர்களுக்கு நிச்சயம் அர்ஜுன் கபூரின் டி-சர்ட்டின் விலை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்யும்.
சமீபத்தில் மலைகா அரோராவை அர்ஜுன் கபூர் பிரேக் அப் செய்து விட்டார் என கொளுத்திப் போட்டு அவரையே நெட்டிசன்கள் கதிகலங்க வைத்த நிலையில், தற்போது யூபர் கூலாக போஸ் கொடுத்து தனது ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் தான் அர்ஜுன் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெகட்டிவ் ரோலில் அஜித்.. AK61 ஆரம்பம் என ட்வீட் போட்ட போனி கபூர்.. வலிமை புரமோஷன் எங்கப்பா?

போனி கபூர் மகன்
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூருக்கும் அவரது முதல் மனைவி மோனா ஷவுரி கபூருக்கும் மகனாக பிறந்தவர் தான் அர்ஜுன் கபூர். உதவி இயக்குநராக கல் ஹோ நா ஹோ படத்தில் பணியாற்றி சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் 2012ம் ஆண்டு வெளியான இசாக்ஸாதே படத்தின் மூலம் நாயகனாக அதிரடி என்ட்ரி கொடுத்தார்.

வாரிசு நடிகர்
பாலிவுட்டில் நெபோடிசம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், நடிகர் அர்ஜுன் கபூரும் எளிதாக பாலிவுட்டில் அறிமுகமாகி விட்டார் என அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. 2 ஸ்டேட்ஸ், கி அண்ட் கா, ஹாஃப் கேர்ள்ஃபிரண்ட், நமஸ்தே இங்கிலாந்து, பானிபட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக மாறிவிட்டார் அர்ஜுன் கபூர்.

வயதான நடிகையுடன் காதல்
36 வயதாகும் அர்ஜுன் கபூர், 48 வயதாகும் நடிகை மலைகா அரோராவை காதலித்து வருகிறார். அடிக்கடி இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக பாலிவுட்டில் ரூமர்களை அர்ஜுன் கபூரின் ரசிகர்களே கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பிரேக்கப் வதந்தியையும் உடனடியாக ஓடி வந்து அர்ஜுன் கபூர் இல்லை என விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.

காஸ்ட்லி டிசர்ட்
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் கபூர் விலையுயர்ந்த காஸ்ட்லி டிசர்ட்டை அணிந்து கொண்டு நடமாடிய புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. நீல நிறத்தில் பிரின்ட்டட் டிசைன் கலந்த அந்த டிசர்ட் தான் தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

விலை என்ன
Amiri எனும் விலை உயர்ந்த பிராண்டட் டிசர்ட்டை அணிந்து கொண்டு அர்ஜுன் கபூர் வெளியில் நடமாடிய விவரங்கள் வெளியான நிலையில், அந்த டிசர்ட்டின் விலை சற்றே தலை சுற்றும் அளவுக்கு உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண டிசர்ட் 100 ரூபாய் முதல் பிராண்டட் டிசர்ட்கள் சில ஆயிரங்கள் வரையில் விற்பனை ஆகி வரும் நிலையில், இந்த Amiri பிராண்ட் டிசர்ட்டின் விலை 46 ஆயிரம் ரூபாயாம். நடிகைகள் மட்டும் தான் லட்சங்களில் புடவைகளை கட்டிக் கொண்டு கெத்து காட்டுவார்களா? நானும் மாஸ் காட்டுகிறேன் என அர்ஜுன் கபூர் அசத்தி உள்ளார்.