பாகிஸ்தான் நடிகையுடன் பார்ட்டி.. அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான் மகன்.. பதான் என்னவாகும்?

மும்பை: சொகுசு கப்பலில் போதை பார்ட்டியில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கலந்து கொண்டதாக அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த குற்றத்துக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்றும் காவல் அதிகாரியின் சூழ்ச்சி தான் என அந்த விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நடிகையுடன் புத்தாண்டு பார்ட்டியில் ஷாருக்கான் மகன் எடுத்துக் கொண்ட போட்டோ அடுத்த சர்ச்சையை பாலிவுட்டில் கிளப்பி உள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள பதான் படத்தையும் ரிலீஸ் செய்யக் கூடாது என பாய்காட் கேங் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

காவி, பச்சை சர்ச்சை

காவி, பச்சை சர்ச்சை

ஷாருக்கானின் பதான் பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்து ஆபாசமாக ஆடினார் என்றும் பச்சை நிற சட்டையை அணிந்து கொண்டு ஷாருக்கான் நடனமாடியது இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவது போல இருக்கிறது என பெரிய சர்ச்சையே வெடித்தது. தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்து வருகிறார் என்கிற முத்திரையும் அவர் மீது குத்தப்பட்டு வருகிறது.

ஆர்யான் கான் கைது

ஆர்யான் கான் கைது

சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கலந்து கொண்டதாக அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தனது மகனை ஜாமினில் எடுக்க ஷாருக்கான் பெரிய போராட்டத்தையே நடத்தினார். கடைசியில் ஆர்யான் கான் மீது எந்த தவறும் இல்லை என கூறப்பட்டது.

பாகிஸ்தான் நடிகையுடன் பார்ட்டி

பாகிஸ்தான் நடிகையுடன் பார்ட்டி

இந்நிலையில், ஆர்யான் கான் மீண்டும் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நடிகை சாடியா கான் (Sadia Khan) உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சாடியா கான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

புது காதலா

புது காதலா

பாகிஸ்தான் நடிகை சாடியா கான் உடன் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் போட்டோ எடுத்துக் கொண்ட நிலையில், இருவரும் காதல் செய்கின்றனரா? என்றும் தந்தையை போலவே மகனும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என பாலிவுட் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நோரா ஃபதேஹி

நோரா ஃபதேஹி

சமீபத்தில் தான் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியுடன் ரொம்ப நெருக்கமாக ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் புயலை பாலிவுட்டில் கிளப்பியது. இந்நிலையில், அடுத்த புயலாக தற்போது பாகிஸ்தான் நடிகையுடன் ஷாருக்கான் மகன் சுற்றி வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பதானுக்கு சிக்கல்

பதானுக்கு சிக்கல்

ஏற்கனவே காவி சர்ச்சை காரணமாக ஷாருக்கானின் உருவ பொம்மை மற்றும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் நடிகையுடன் அவரது மகன் ஆர்யான் கான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில், பதான் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை குழுவும் இன்னமும் அந்த படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X