twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்யன் கானின் ஜாமீன் மனு நிராகரிப்பு.. மும்பை உயர்நீதிமன்றத்தை நாட ஷாருக்கான் முடிவு !

    |

    மும்பை : போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

    அர்பாஸ் வியாபாரி மற்றும் முன்முன் தமேச்சா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

    விஜய் பற்றி ஒரே வார்த்தைல சொல்லுங்க...பூஜா ஹெக்டே கொடுத்த அசத்தல் பதில் விஜய் பற்றி ஒரே வார்த்தைல சொல்லுங்க...பூஜா ஹெக்டே கொடுத்த அசத்தல் பதில்

    இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீனுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

    கப்பலில் பார்ட்டி

    கப்பலில் பார்ட்டி

    மும்பையில் நடுக்கடலில் கடந்த 2ந் தேதி நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோடீஸ்வர குடும்பங்களை சேர்ந்தவர்களும், திரையுலக பிரபலங்களும், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

    போதை பொருள்

    போதை பொருள்

    இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததை அடுத்து, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண உடையில் அந்த கப்பலில் பயணம் செய்தனர். மும்பையில் இருந்து கிளம்பிய அந்த கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 2ம் கட்டமாக மேலும் சிலரை கைது செய்தனர்.

    மும்பை சிறப்பு நீதிமன்றத்தில்

    மும்பை சிறப்பு நீதிமன்றத்தில்

    ஆர்யன் கானின் ஜாமீன் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்திருந்த நிலையில் இன்றும், ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது என்சிபி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றார். ஆரியன் முதல் முறையாக போதை பொருளை பயன்படுத்துபவர் அல்ல, கடந்த சில வருடங்களாக அவர் சட்டவிரோதமாக போதைப் பொருளை பயன்படுத்தி உள்ளார் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தனர்.

    ஜாமீன் நிராகரிப்பு

    ஜாமீன் நிராகரிப்பு

    இதையடுத்து, ஆர்யன் கான் மற்றும் வணிக வியாபாரி அர்பாஸ் மற்றும் முன்முன் தமேச்சா ஆகிய மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன் அவர்களின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளனர். இதையடுத்து, ஆர்யன் கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.

    English summary
    Aryan Khan's bail was rejected again by a court in Mumbai today in the drugs on cruise case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X