வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்.. உதவிக்கரம் நீட்டிய அமீர் கான்.. பாராட்டி முதல்வர் !
அசாம் : அசாம் வெள்ள நிவாரணத்திற்கு இந்தி நடிகர் அமீர் கான் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கியதற்கு அசாம் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அசாமில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அசாம் வெள்ளத்திற்கு 28 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளனர்.

25 லட்சம் நிவாரணம்
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு இந்தி நடிகர் அமீர் கான் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார். அவரது செயலுக்கு அம்மாநில முதல்வர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மனமார்ந்த நன்றி
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில்,. பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், முதல்வர் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை தாராளமாக வழங்கியதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது மாநில மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளீர்கள். அவரது அக்கறை மற்றும் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா
முதலமைச்சரின் நன்றிக்கு அமீர் கான் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் தற்போது லால் சிங் சத்தா படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக இருக்கிறார். அமீர் கான் நடிப்பில் ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் ஆன லால் சிங் சத்தா படம் ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாக உள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபாரெஸ்ட் கம்ப் திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார்.

அமீர் கானின் சொந்த தயாரிப்பு
டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரெஸ்ட் கம்ப் கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். கரீனா கபூர், அமீர் கான் காதலியாக நடித்துள்ளார். இப்படத்தில் அமீரின் அம்மாவாக மோனா சிங் நடித்திருக்கிறார். மேலும், அமீரின் நெருங்கிய நண்பராக நாக சைதன்யாவும் நடிததுள்ளார். இந்தப் படம் நாக சைதன்யாவின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது சொந்த நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.
Recommended Video

பாடல்கள் ஹிட்
இத்திரைப்படத்திலிருந்து இதுவரை ஃபிர் நா ஐசி ராத் அயேகி, கஹானி மற்றும் மெய்ன் கி கரான் ஆகிய மூன்று பாடல்களை வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாடலாசிரியர்களை கவனத்தில் கொண்டு, இசை வீடியோவாக இல்லாமல் பாடல்கள் வெளியிடப்பட்டன.


Click it and Unblock the Notifications











