கங்கனா பற்றி பேச விருப்பமில்லை.. நான் மறந்துவிட்டேன்.. முன்னாள் காதலர் பேட்டி

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். சூழல் இப்படி இருக்க அவரது முன்னாள் காதலர் அத்யாயன் சுமன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தனது கடந்த காலத்தை பற்றி பேசியிருக்கிறார். அந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

Athyayan Suman Open Talks about Actress Kangana Ranaut at Latest interview

குயின் கங்கனா: கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் கொடுத்துள்ளது. கங்கனா ரணாவத் பாஜக ஆதரவாளர் அதனால்தான் அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கங்கனா: தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் பக்கம் வராத அவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர் மேலும் ஹிந்தியில் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எமர்ஜென்ஸி படத்திலும் நடிக்கிறார் கங்கனா.

அதிரடி கருத்து: தனது மனதில் பட்டதை பேசும் கங்கனா சமீபத்தில்கூட, ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். கடந்த வருடம்கூட லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பாஜகவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலர் பேட்டி: இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் முன்னாள் காதலர் அத்யாயன் சுமன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அந்தப் பேட்டியில் அவரிடம் கங்கனா ரணாவத் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "நீங்கள் சொல்லும் நபர் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் கடந்த காலத்தை நான் மறந்துவிட்டேன். அது நடந்த பிறகு நான் அதை கடந்தும் வந்துவிட்டேன். அப்போது எனக்கு 20 வயதுதான் ஆனது, இப்போதோ 36 வயது ஆகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X