பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன் காண தயாரா.. படே மியான் சோட்டே மியான் ரிலீஸ் எப்போ தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்தின் மீதான உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்த சூழலில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியது. இந்நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்‌ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Bade Miyan Chote Miyan Movie Hits Screen on April 11 Here is Announcement

சர்ச்சை நாயகன் அக்‌ஷய் குமார்: நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்‌ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்‌ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்‌ஷய், “ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்” என தெரிவித்திருந்தார்.

படே மியான் சோட்டே மியான்: அவரது நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. தற்போது படே மியான் சோட்டே மியான் உருவாகியிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் உருவாகியிருக்கிறது. ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர்.

பல நாடுகளில் ஷூட்டிங்: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையானதாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்போது ரிலீஸ்: படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கிறது. அதுகுறித்த மேக்கிங் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏப்ரல் 11ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் பேச்சு: முன்னதாக இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், " ரசிகர்களுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X