காதலே இல்லை.. சினிமா பிரபலங்கள் கல்யாணம் பண்றதே அதுக்காகத்தான்.. பாகுபலி நடிகை பகீர்!
மும்பை: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதே பணத்துக்காகத்தான் என பகீர் கிளப்பியுள்ளார்.
எந்த ஒரு காதலும் இல்லாமல் தங்களது சினிமா வாழ்க்கை பாதித்து விடக்கூடாது என்பதற்காக சமீபகாலமாக திட்டமிட்டு சில பிரபல நடிகர்களின் திருமணங்கள் நடைபெற்று இருப்பதாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நோரா ஃபதேகி.

32 வயது ஆன இளம் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி 2014 ஆம் ஆண்டு வெளியான ரோர்: சுந்தரவனக்காடுகள் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் குத்தாட்ட பாடல்களுக்கு ஆடி வரும் எவர் பாலிவுட்டில் மர்மப் பக்கங்களை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாரு இந்த நோரா ஃபதேகி?: ரோர் படத்தின் மூலமாக அறிமுகமானநோரா ஃபதேகி இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஐட்டம் டான்ஸராக பல படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான டெம்பர் திரைப்படத்தின் குத்தாட்டம் போட்டு தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் பாகுபலி படத்தில் " மனோகரி" பாடலுக்கு பிரபாஸ் மற்றும் ராணா டகுபதியுடன் இணைந்து நடனமாடி உலக அளவில் பிரபலமானார். மலையாளத்தில் காயங்குளம் கொச்சுண்ணி படத்தில் நடனமாடியுள்ளார். இந்த ஆண்டு இந்தியில் வெளியான கிராக் மற்றும் மட்கான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் செய்வதே பணத்துக்காக: பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் திருமணம் செய்து வந்த நிலையில், திடீரென நோரா ஃபதேகி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது எந்த நடிகரை டார்கெட் செய்து அவர் பேசியுள்ளார் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. பாலிவுட்டில் யாரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் சினிமாவில் நீடித்து நிற்கவே பிரபலங்களுடன் பிரபலங்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் திருமணத்தையே பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செய்ய ஆரம்பித்திருப்பது சகிக்க முடியவில்லை என பேசியுள்ளார்.
மோசமான முதலைகள்: பாலிவுட்டில் பல முதலைகள் உள்ளனர் அவர்கள் எப்போதுமே வேட்டையாடு நோக்கத்திலேயே நடிகைகளை அணுகி வருகின்றனர். ஒரு ஹீரோயின் நல்லா நடித்துக் கொண்டிருந்தால் அவரை திருமணம் செய்துக் கொண்டு சில ஆண்டுகள் அந்த ஹீரோ லைம் லைட்டில் அடுத்த 4 வருஷங்களுக்கு தேவையான படங்களை பிடித்து நடித்து வருகிறார் என பகீர் கிளப்பி உள்ளார்.
ரன்பீர் கபூரை சொல்கிறாரா?: ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் - ஆலியா பட், கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் உள்ளிட்டோர் தான் சமீபத்தில் பாலிவுட்டில் திருமணம் செய்துக் கொண்டு நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களில் அதிகளவில் பட வாய்ப்புகள் ரன்பீர் கபூருக்கு குவிந்து வருவதால் ரன்பீர் கபூர் - ஆலியா பட்டை டார்கெட் செய்து பேசியுள்ளாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நோரா ஃபதேகிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இப்படி புலம்புகிறார் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











