twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகின் மிக உயரிய மொபைல் தியேட்டரில் ஸ்க்ரீனிங் செய்யப்பட்ட அக்ஷய் குமாரின் பெல் பாட்டம்!

    |

    மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம் திரைப்படம் உலகின் மிக உயரிய மொபைல் தியேட்டரான லடாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அக்ஷய் குமார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

    வடிவேலுக்கு என்னங்க பிரச்சனை...சரத்குமாருக்கு எதுவுமே தெரியாதாம் வடிவேலுக்கு என்னங்க பிரச்சனை...சரத்குமாருக்கு எதுவுமே தெரியாதாம்

    அக்ஷய் குமாருக்கு பாலிவுட் மட்டுமின்றி நாடு முழுவதுவமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அக்ஷய் குமார் ஆக்ஷன், ரொமான்ஸ், பயோ பிக் என பட்டையை கிளப்பி வருகிறார்.

    8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

    100க்கும் மேற்பட்ட படங்கள் - விருதுகள்

    100க்கும் மேற்பட்ட படங்கள் - விருதுகள்

    இதுவரை 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். அவற்றில் பெரும்பாலான படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட். அக்ஷய் குமார் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம் ஃபேர் விருது மற்றும் வெளிநாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார் அக்ஷய் குமார்.

    ஷங்கர் இயக்கத்தில் தமிழில் 2.0

    ஷங்கர் இயக்கத்தில் தமிழில் 2.0

    தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் நடித்தார். இதில் பக்ஷி ராஜன் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அக்ஷய் குமார், இந்தி மட்டுமின்றி மராத்தி, பஞ்சாபி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    பெல் பாட்டம் - ஸ்பை த்ரில்லர்

    பெல் பாட்டம் - ஸ்பை த்ரில்லர்

    தற்போது நடிகர் அக்ஷய் குமார் பிரித்திவிராஜ், சூர்யவன்ஷி, பச்சன் பாண்டே, அட்ராங்கி ரே, ராம் சேது, ரக்க்ஷா பந்தன், சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் பெல் பாட்டம். பெல் பாட்டம் படம் 1980-களில் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஸ்பை த்ரில்லர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    லண்டனில் பெல் பாட்டம் படப்பிடிப்பு

    லண்டனில் பெல் பாட்டம் படப்பிடிப்பு

    இந்த படத்தை ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா முதல் அலையின்போது படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற படக்குழு லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது. இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    தியேட்டரில் ரிலீஸ் ஆன பெல் பாட்டம்

    தியேட்டரில் ரிலீஸ் ஆன பெல் பாட்டம்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டது.

    அமேசான் நிறுவனம் இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஆனால், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடந்த வாரம் பெல் பாட்டம் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் பல்வேறு பிரபலங்களும் படக்குழுவின் தைரியத்தை பாராட்டினர்.

    வசூலை குவித்த பெல் பாட்டம்

    வசூலை குவித்த பெல் பாட்டம்

    மேலும் இப்படம் பைரசி தளங்களில் வெளியிடப்பட்ட போதும் வசூலையும் குவித்தது. சில மாநிலங்களில் மட்டுமே 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் முதல் நாளில் 2.75 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இந்நிலையில் இப்படம் குறித்த மற்றொரு சிறப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    மிக உயராமான மொபைல் தியேட்டர்

    மிக உயராமான மொபைல் தியேட்டர்

    அதாவது, அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் லடாக்கில் உள்ள உலகின் மிக உயர்ந்த மொபைல் திரையரங்கில் திரையிடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தப் படம் மூலம் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குள் இழுக்க முடிந்தது. இந்த படம் தற்போது லடாக்கில் உள்ள உலகின் மிக உயர்ந்த மொபைல் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.

    என்ன ஒரு அற்புதமான சாதனை..

    என்ன ஒரு அற்புதமான சாதனை..

    சிறப்புத் திரையிடல் பற்றிய தனது உணர்வுகளை அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அக்ஷய் குமார் தியேட்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது, "லடாக்கின் லேவில் உள்ள உலகின் மிக உயர்ந்த மொபைல் தியேட்டரில் பெல் பாட்டம் திரையிடப்பட்டது என் இதயத்தை பெருமையடையச் செய்கிறது. 11562 அடி உயரத்தில், 28 டிகிரி வெப்பநிலையில் தியேட்டர் செயல்பட முடியும். என்ன ஒரு அற்புதமான சாதனை.. என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Akshy Kumar's Bell Bottom has been screened at world’s highest mobile theatre in Ladakh. Akshay Kumar has shared the mobile theatre's photo on Social media with heart felt message.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X