Bhool Bhulaiyaa 3 vs Singham Again Box Office: பேய் படத்தை பாக்ஸ் ஆபிஸில் பந்தாடிய சிங்கம் அகைன்!

மும்பை: கார்த்திக் ஆர்யான், திரிப்தி திம்ரி, வித்யா பாலன், மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் வெளியான புல் புலாய்யா 3 படத்தை பாக்ஸ் ஆபிஸில் அஜய் தேவ்கனின் காப் யூனிவர்ஸ் படமான சிங்கம் அகைன் முந்தியுள்ளது. ஆனாலும், ஸ்ட்ரீ 2 படத்தின் முதல் நாள் வசூலை அந்த படம் முந்தவில்லை.

இந்த தீபாவளிக்கு தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியில் வெளியான 2 படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தியேட்டருக்குச் சென்ற ரசிகர்களை கொஞ்சமும் அந்த இரண்டு படங்களும் ஏமாற்றாமல் கல்லா கட்டி வருகின்றன.

bhool bhulaiyaa 3 singham again box office 3

கார்த்திக் ஆர்யான் நடிப்பில் வெளியான புல் புலாய்யா 2 படத்தை விட இந்த 3ம் பாகம் அதிக வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூலை சிங்கம் அகைன் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

Bhool Bhulaiyaa 3: இந்த ஆண்டு நாடு முழுவதும் ஏகப்பட்ட பேய் படங்கள் வெளியாகின. எல்லா படங்களுமே ரசிகர்களை தியேட்டர்களில் திகிலூட்டி மகிழ்வித்தன. பிரமயுகம், அரண்மனை 4, டிமான்ட்டி காலனி 2, மூஞ்சியா மற்றும் ஸ்ட்ரீ 2 என அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான புல் புலாய்யா 3 படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. புல் புலாய்யா முதல் படம் சந்திரமுகி படத்தின் ரீமேக்காக இருக்கும். அதன் 2ம் பாகத்தில் தபு நடித்திருப்பார். அந்த படம் அப்படியே பிரியாமணி நடித்த சாருலதா படத்தின் கதை போலவே இருக்கும். இந்நிலையில், 3வது பாகத்தில் மாதுரி தீக்‌ஷித், வித்யா பாலன் மற்றும் கவர்ச்சிக்கு திரிப்தி திம்ரி என கார்த்திக் ஆர்யான் உடன் இணைந்து 3 நடிகைகள் நடித்திருக்கும் படம் தியேட்டர்களை அதிர வைத்து வருகிறது.

Bhool Bhulaiyaa 3 முதல் நாள் வசூல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதியே வெளியாகாமல் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு வட இந்தியாவில் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தான் இந்த இரண்டு படங்களும் வெளியாகின. ஐடியா இல்லாத பாய்ஸ் என்றும் தமிழில் வியாழன் முதல் ஞாயிறு வரை படத்தை ஓட்டி வசூல் ஈட்டி வருகின்றனர் என சோஷியல் மீடியாவில் ட்ரோல்களும் குவிந்தன. 2022ம் ஆண்டு வெளியான புல் புலாய்யா 2 திரைப்படம் முதல் நாளில் 13.5 கோடி வசூல் செய்த நிலையில், அதன் 3ம் பாகம் முதல் நாளில் 35.50 கோடி வசூலை இந்தியளவில் பெற்றுள்ளது.

சிங்கம் அகைன் வசூல்: அக்‌ஷய் குமார், கரீனா கபூர், அர்ஜுன் கபூர் நடிப்பில் வெளியான சிங்கம் அகைன் படத்தில் கேமியோக்கள் தான் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன. சூர்யவன்ஷி அக்‌ஷய் குமார் ஹெலிகாப்டரில் வரும் போது கருடக் கடவுளாகவே அவரை காட்டிய விதத்தில் கூஸ்பம்ப்ஸ் அடைகின்றனர் பாலிவுட் ரசிகர்கள். லேடி சிங்கமாக தீபிகா படுகோன், டைகர் ஷெராஃப், ரன்வீர் சிங் மற்றும் கிளைமேக்ஸில் சுல்புல் பாண்டே சல்மான் கான் என ஏகப்பட்ட கேமியோக்கள் வந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளனர். முதல் நாளில் சிங்கம் அகைன் திரைப்படம் 43.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. 500 கோடி வரை படத்தின் வசூல் செல்லும் என எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X