பாலிவுட் நடிகை ஆகான்ஷாவிற்கு செல்ல பெயர் வைத்த அமிதாப் பச்சன்

மும்பை : நடிகர் அமிதாப் பச்சன், அகான்ஷா, அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 34.

இந்தப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அமிதாப்பின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ளார் அகான்ஷா.

நடிகை ஆகான்ஷாவிற்கு அமிதாப்பச்சன் செல்ல பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுக்குள் நட்பு உருவாகியுள்ளது.

ரன்வே 34 படம்

ரன்வே 34 படம்

நடிகர் அஜய் தேவ்கனின் ரன்வே 34 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஆகான்ஷா மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அமிதாப் விருப்பத்திற்குரிய நடிகை

அமிதாப் விருப்பத்திற்குரிய நடிகை


இந்த ஷூட்டிங்கின்போது அமிதாப்பச்சனின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார் அகான்ஷா. சூட்டிங்கின் போது அவருக்கு காலில் பிராக்சர் ஏற்பட்ட நிலையிலும் அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று உள்ளார். வீல் சேரில் வந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவரது தீவிரத்தைப் பார்த்து அமிதாப்பச்சன் வியப்படைந்துள்ளார்.

தொடர்ந்து ஆகான்ஷாவிற்கு அவர் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் சிறப்பான நட்பு உருவாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் இடைவேளைகளின் போது மற்றவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை அகான்ஷா கொடுத்ததும் அமிதாப்பச்சனின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

அகன்ஷாவிற்கு செல்ல பெயர்

அகன்ஷாவிற்கு செல்ல பெயர்

இதையடுத்து அகான்ஷாவிற்கு அவர் சாக்லேட்கள் உள்ளிட்டவற்றை பரிசளித்துள்ளார். மேலும் அவருக்கு டூட்டி ஃப்ரூட்டி என்று செல்லப் பெயரையும் அமிதாப்பச்சன் வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அமிதாப் குறித்து கவிதை

அமிதாப் குறித்து கவிதை

இதையடுத்து அகான்ஷா, அமிதாபச்சன் குறித்து கவிதை ஒன்றை எழுதி அவருக்கு கொடுத்துள்ளார். இதனால் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார் அமிதாப்பச்சன். இதனிடையே அமிதாப்பச்சனுடன் நடிப்பது தன்னுடைய கனவு நனவான தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அகான்ஷா.

இவர்களின் இந்த நட்பால் ரன்வே 34 படத்தின் சூழ்நிலையும் சிறப்பாக மாறியுள்ளது. இந்த படத்தை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று தற்போது ஆகான்ஷா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X