ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் செம லவ் போல.. அதுல ரொம்பவும் கவனமாக இருந்தாங்கலாம்.. என்னனு தெரியுமா?

மும்பை: பாலிவுட் சினிமாவில் பலருக்கும் பிடித்த ஜோடிகளில் ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் உள்ளனர். இவர்கள் இருவரது காதல் கதை தொடங்கி கல்யாணக் கதை வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அதுவும் அண்மையில் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவல் உலா வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியான நிலையில் அபிஷேக் பச்சன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் தனது 19 வயதிலேயே உலக அழகிப் பட்டத்தை வென்றார். அதன் பின்னர் தென்னிந்திய சினிமா, அதைத் தொடர்ந்து பாலிவுட் சினிமா என சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தார். இவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் இந்தியா முழுவதும் உள்ள நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Abhishek Bachchan Aishwarya Rai Abhishek Bachchan Interview Bollywood

இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். டீன் ஏஜில் இருக்கும் மகள் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவ்வப்போது பெற்றோர்களுடன் பல நிகழ்ச்சிகளிலும் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த ஆண்டில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவல் உலா வந்தது. அவர்களின் விவாகரத்திற்கு காரணம் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் என்பவர்தான் எனவும் தகவல்கள் உலா வந்தது. அதாவது நிம்ரத் கவுர் உடன் அபிஷேக் பச்சன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளனர் என்றெல்லாம் தகவல்கள் வெளியானது.

Abhishek Bachchan Aishwarya Rai Abhishek Bachchan Interview Bollywood

ஐஸ்வர்யா ராய்: ஐஸ்வர்யாவும் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தனது மகளுடன் மட்டும் கலந்து கொண்டார். ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா ராய்யின் கைகளில் திருமண மோதிரம் இல்லாததால் விவாகரத்து குறித்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படியான நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை வெளிநாட்டில் முடித்துவிட்டு, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவர்களின் மகள் ஆராத்யா பச்சன் என அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்னர்தான் விவாகரத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Abhishek Bachchan Aishwarya Rai Abhishek Bachchan Interview Bollywood

கவனம்: இப்படியான நிலையில் அபிஷேக் பச்சன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில், காடுகளுக்குள் படப்பிடிப்பு நடக்கும் போது, மிகவும் சவாலான சூழல்களில் படப்பிடிப்பு நடக்கும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அபிஷேக் பச்சன், நான் சாதாரண மனிதன். சாதாரண கணவன். எனக்கு எனது மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்தானே. அதுபோலத்தான் படப்பிடிப்பு நடக்கும் போது, ஐஸ்வர்யா ராய்யின் பாதுகாப்பில் நான் அதிக அக்கறையுடன் இருப்பேன். அதேபோல் ஐஸ்வர்யாவும் எனது பாதுகாப்பில் அதிக அக்கறையுடன் இருப்பார்" என பதில் அளித்துள்ளார்.

Abhishek Bachchan Aishwarya Rai Abhishek Bachchan Interview Bollywood

கடைசி படம்: அவரது இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும் பாலிவுட் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் ஜோடிகள் என்பதால் இருவரும் இறுதி வரை இணைந்து வாழ வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து நடித்த கடைசி படம் ராவணன். இந்தியில் உருவான இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் ராவணனாக நடித்திருப்பார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கினார். இந்தப் படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Abhishek Bachchan Aishwarya Rai Abhishek Bachchan Interview Bollywood

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X