60வயதில் வந்த காதல்.. 3வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்.. பொம்பள சோக்கு கேக்குதா விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர்களாக இருந்தால், அவர்களை பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு கிசு கிசு வந்து கொண்டே தான் இருக்கும், அதற்கு காரணம் அவர்கள் செய்யும் சில சில்மிஷ வேலைகள் தான். அப்படித்தான் பாலிவுட் நடிகர் இரண்டு திருமணம் செய்து குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு, தற்போது அவர்களை விவாகரத்தும் செய்து விட்டு, தனது 60வது பிறந்த நாளில் புதிய காதலியை அறிமுகம் செய்துவைத்துள்ளார். இது இணையத்தில் பேசுபொருளான நிலையில் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான், கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாசி, ராஜா இந்துஸ்தானி, இஷ்க் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் நடிகராக மாறினார். இவர் நடித்த பிகே, லகான், தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளின.

பாலிவுட் நடிகர் அமீர்கான்: இந்நிலையில், நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது தனது காதலியை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ரீதா தத்தா, கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இவர்களை விவாகரத்து செய்துவிட்டார். அண்மையில் தான் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது மூன்றாவது காதலியான கெளரி ஸ்ப்ராட்டை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மூன்றாவது காதலி: இதுகுறித்து மீடியா முன் பேசிய அமீர்கான், 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் தான் கெளரி ஸ்ப்ராட். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவினர் ஒருவர் மூலம் மீண்டும் கெளரியின் அறிமுகம் கிடைத்தது. அந்நேரம் எனக்கு அமைதி தரக்கூடிய ஒருவரை தேடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கெளரி என்னிடம் வந்து சேர்ந்ததால் அவருடன் வாழ முடிவு எடுத்தேன். இப்போது நான் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன். கௌரி என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் 18 வயது பையனாகவே உணர்கிறேன். எங்கள் வீட்டுப்பெண்களை மீடியா முன்பு அழைத்து வருவது வழக்கம் என்பதால், கெளரியை என் பிறந்த நாளில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றார். மேலும், கௌரி தான் என் லைஃப் பார்ட்னர் விரைவில் இவரை திருமணம் செய்ய இருப்தபாகவும் கூறி அவரது நெற்றியில் முத்தமிட்டார்.
இந்த செய்தி இணையத்தில் டிரெண்டான நிலையில் 60வது வயதில் மூன்றாவது திருமணமா என்றும், பொம்பள சோக்கு கேக்குதா என்றும் இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 6 வயது குழந்தைக்கு தாயான கெளரி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமீர் கானுடன் திருமணம் செய்து கொள்ளாமல் மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அக்கறையான, அன்பானவரை தேடி அலைந்த போது அமீர் கான் கிடைத்ததாகவும், அவர் என் மீது வைத்து இருக்கும் அன்பை பார்த்து அவர் மீது காதல் வந்ததாக கவுரி ஸ்ப்ராட் தெரிவித்திருக்கிறார். இப்போது ஆமீர் கானின் படப்பிடிப்பு வேலைகளை கெளரி முன்நின்று செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications