அபிஷேக் பச்சனுக்கு கையில் காயம்… பதறிப்போன படக்குழு... மருத்துவமனையில் அனுமதி !
மும்பை : அபிஷேக் பச்சனுக்கு கடந்த வாரம் படப்பிடிப்பின் போது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக்கை அவரது தந்தை அமிதாப் பச்சன் மற்றும் சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அமிதாப் பச்சன்
மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் 2000ம் ஆண்டு Refugee என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்லத் தொடக்கத்தை கொடுத்தது. Tera jadoo chal Gayaa, Dhai Akshar prem ke, Bas itna sa Khwaab hai, Haan Maine Bhi Pyaar kiya, போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

அபிஷேக் முதல் படத்தில் பிரபலம்
இதையடுத்து, ஐஸ்வர்யா ராயை 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர். கர்ப்ப காலத்தின் போது மட்டும், ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மும்பை விமான நிலையத்தில்
ஐஸ்வர்யாராய் தற்போது மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலிரி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற அவரது மனைவி மற்றும் மகளைப் பார்க்க அபிஷேக் பச்சன் மும்பை கலினா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது, அபிஷேக் கையில் பெரிய கட்டுகளுடன் காணப்பட்டார்.

முக கவசத்துடன் அமிதாப் பச்சன்
இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக்கை அவரது தந்தை அமிதாப் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் நந்தா ஆகியோர் முக கவசம் அணிந்து கொண்டு வந்திருந்தார். மேலும்அபிஷேக் பச்சன் கையில் வீக்கம் இருப்பதால் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தி ரீமேக்
பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது. மேலும், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகளை இப்படம் குவித்த நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில், பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் அபிஷேக் பச்சனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











