Ira khan :பாய் பிரண்டுடன் பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் மகள்.. போட்டோவிற்கு சூப்பர் போஸ்!

மும்பை : பாலிவுட்டின் முன்னணி ஹீரோ அமீர்கானின் மகள் ஐரா கானும் தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இவர் அடிக்கடி பிகினியில் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பி வருகிறார். தன்னுடைய தந்தையுடனும் இவர் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த பிறந்தநாளில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பிகினில் நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிரடி கிளப்பின.

Bollywood actor Amir khans daughter Ira khan celebrates her 25th birthday with her boyfriend

அமீர்கான் மகள் பிறந்தநாள் :பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா படம் படுதோல்வியடைந்தது. இதையடுதது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார் அமீர்கான். தொடர்ந்து கஜினி படத்தின் இரண்டாவது பாகத்தில் இவர் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம் உள்ள நிலையில், இவரது மகள் ஐரா கானுக்கும் அதே அளவிற்கு ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. இந்திய அளவில் இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி பிகினியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிரடியாக கவர்ந்து வருகிறார். கடந்த பிறந்தநாளில் இவர் வெளியிட்ட இத்தகைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

Bollywood actor Amir khans daughter Ira khan celebrates her 25th birthday with her boyfriend

தன்னுடைய நண்பர்களுடன் பிகினியில் நீச்சல் குளத்தில் இவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதே நீச்சல் உடையிலேயே பார்ட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டார். இந்த கொண்டாட்டத்தில் அமீர்கான் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். கையில் கிளாசுடன், தன்னுடைய பாய் பிரெண்டுடன் இறுக்கி அணைத்தபடியும் ஐரா இந்தப் புகைப்படங்களில் காணப்பட்டார். பாலிவுட் கலாச்சாரத்தை உடைக்கும் வகையில் அவர் கொழுக் மொழுக் என்று காணப்படுகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இவர் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து தன்னுடைய பாய்பிரண்டுடன் இணைந்து இவர் பார்ட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். இதனிடையே அதிகாலையிலேயே தன்னுடைய ஜிம் வொர்க் அவுட்டை முடித்துவிட்டு தன்னுடைய காதலருடன் இணைந்து இவர் காணப்பட்டார். இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Bollywood actor Amir khans daughter Ira khan celebrates her 25th birthday with her boyfriend

ஐரா மற்றும் அவரது காதலர் நூபுரின் திருமணம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் ஐராவோ, அமீர்கானோ இதுகுறித்து எந்தவிதமான அறிவிப்பையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் நூபுரை தான் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளதாக முன்னதாக ஐரா, வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் ஐரா, இதுகுறித்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X