பரம்பரை வீட்டை விற்ற அமிதாப்பச்சன்… திடீரென வீட்டை விற்க என்ன காரணம் ?
மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தாய், தந்தை வாழ்ந்த பரம்பரை வீட்டை விற்றுள்ளார்.
Recommended Video
டெல்லி குல்மோஹர் பூங்காவில் அமைந்துள்ள சோபான் என்ற வீடு ₹23 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாய், தந்தை வாழ்ந்த வீட்டை திடீரென விற்றதற்கு என்ன காரணம் என சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அமிதாப் பச்சன்
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஏராளமான விளம்பர படங்களில்
அமிதாப் பச்சனுக்கு 79 வயதாகிவிட்ட போதிலும் எப்போதும் துடிப்புடனும், இளமையுடனே காணப்படுகிறார். பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார். தற்போதும் இன்னும் ஏராளமான விளம்பரங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமான வீடு
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு மும்பையில் பல்வேறு பகுதிகளில் இடங்களில் சொந்த வீடுகள் உள்ளன. இவர் தங்கியிருக்கும் வீடு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வீடாகும். அமிதாப் மும்பையில் பல வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதேபோல நடிகை கீர்த்தி சனான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது வீட்டில் லீசுக்கு இருக்கிறார்.

வீட்டை விற்க என்ன காரணம் ?
இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு டெல்லியில் சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில் இவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார்கள். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிப்பதில்லை. இதனால் அமிதாபச்சன் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு இந்த வீட்டை விற்பனை செய்திருக்கிறார். அதுவும் இந்த வீட்டை 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார். இந்த வீடு 418.05 சதுர மீட்டர் கொண்டது. இவ்வளவு பிரம்மாண்டமான வீட்டை மார்க்கெட் விலை அளவுக்கு அமிதாப் பச்சன் விற்பனை செய்து இருக்கிறார். தாய், தந்தை வாழ்ந்த பூர்வீக வீட்டை விற்பதற்கான காரணம் என்ன என்று சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











