இந்தியில் சேது படத்தை இயக்கிய சதீஷ் கௌசிக் காலமானார்.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்!

மும்பை : பாலிவுட்டில் பிரபல இயக்குநரும் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவருமான சதீஷ் கௌசிக் காலமானார்.

நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமான கௌசிக்கின் வயது 66. அவரது திடீர் மரணத்தால் பாலிவுட் திரையுலகம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அனுபம் கெர், கங்கனா ரணாவத் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் சதீஷ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் காமெடி நடிகர் சதீஷ் கௌசிக்

பாலிவுட் காமெடி நடிகர் சதீஷ் கௌசிக்

பாலிவுட்டில் சிறந்த இயக்குநராக திகழ்ந்தவர் சதீஷ் கௌசிக். இவர் ஸ்ரீதேவி நடிப்பில் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா என்ற படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக பாலிவுட்டில் நிலை நிறுத்தியவர். தொடர்ந்து 90களில் மிஸ்டர் இந்தியா என்ற படத்தையும் தயாரித்து தன்னை சிறந்த நகைச்சுவை நடிகராகவும் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து 13 படங்களை இயக்கியுள்ளார் சதீஷ் கௌசிக். 90களின் ரசிகர்களின் பேவரைட் இயக்குநராக இருந்து வருகிறார்.

சேது படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர்

சேது படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர்

மேலும் தயாரிப்பாளராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய சதீஷ் கௌசிக், தமிழில் பாலா இயக்கத்தில் அனைவரையும் கவர்ந்த சேது படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். சல்மான் கான் -பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் பெற்றது. ஐஃபா, பிலிம்பேர் விருதுகளில் இந்தப்படத்திற்காக சிறந்த இயக்குநராக சதீஷ் பரிந்துரைக்கப்பட்டார். இதுவரை 90 படங்களில் நடிகராகவும் இவர் நடித்துள்ளார்.

கங்கனா இயக்கத்தில் இறுதியாக நடித்த சதீஷ்

கங்கனா இயக்கத்தில் இறுதியாக நடித்த சதீஷ்

சிறந்த நகைச்சுவை நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சதீஷ் கௌசிக், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் சாத்ரிவாலி என்ற படம் நெட்பிளிக்சில் வெளியானது. இதனிடையே அடுத்ததாக கங்கனா ரணாவத் இயக்கத்தில் உருவாகியுள்ள எமெர்ஜென்சி என்ற படத்தில் இறுதியாக நடித்துள்ளார்.

 அனுபம் கெர் உருக்கம்

அனுபம் கெர் உருக்கம்

இந்நிலையில் நேற்றிரவு காலமான சதீஷின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சதீஷின் மறைவால் பாலிவுட் திரையுலகம் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சதீஷின் நெருங்கிய நண்பரும் நடிகருமான அனுபம் கெர், மரணமே இந்த உலகின் இறுதி உண்மை என்பதை நான் அறிவேன், ஆனால் சதீஷ் குறித்து இப்படி நான் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சிறப்பான சியர் லீடர்

சிறப்பான சியர் லீடர்

இதனிடையே எமெர்ஜென்சியில் அவரை இறுதியாக இயக்கியுள்ள கங்கணா தனது இரங்கல் பதிவில், சதீஷ் தன்னுடைய சிறப்பான சியர் லீடர் என்றும் அவரை எமெர்ஜென்சியில் இயக்கியது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அனைவரையும் தன்னுடைய நகைச்சுவையால் சிறப்பாக என்டர்டெயின் செய்துவந்த சதீஷ், இல்லாததை பாலிவுட் திரையுலகத்தினரால் ஏற்க முடியவில்லை. அவரது இந்த மரணம் ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகப் பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X