ஸ்ரீதேவி, ரேகா, ஹேமமாலினி பல நடிகைகளுடன் ரகசிய காதல்.. பாலிவுட்டின் காதல் மன்னன் ஜீதேந்திரா!

மும்பை : பாலிவுட்டின் மூத்த நடிகரான ஜீதேந்திரா ஸ்ரீதேவி, ரேகா, ஹேம மாலினியை ரகசியமாக காதலித்து உறவில் இருந்துள்ளார்.

பல ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயத்தை பாலிவுட் சோஷியல் மீடியாக்கள் தற்போது தோண்டி எடுத்து ஜீதேந்திராவின் பெயரை டேமேஜ் ஆக்கி உள்ளது

இந்த விஷயத்தை தற்போது கேள்வி பட்ட இன்றைய தலைமுறையினர் யாரு அந்த ஜீதேந்திரா என கூகுளில் தேடத்தொடங்கி உள்ளனர்.

Bollywood actor Jeetendra was secretly in love with Sridevi, Rekha and Hema Malini

நடிகர் ஜீதேந்திரா: 70வது மற்றும் 80களில் டாப் நடிகரான ஜீதேந்திரா இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகருக்கு உரிய அனைத்து அம்சமும் நன்றாக பொருந்தி இருந்தால், அந்த காலத்து டீன் ஏஜ் பெண்களுக்கும் இவர் பிடித்தமான நடிகராக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை ரங்கோலியில் இவரது பாட்டு வந்து விட்டால் இளம் பெண்கள் குஷியாகி விடுவார்கள். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் ஜீதேந்திரா.

மாஸ் நடிகரானார்: வி ஷாந்தராமின் நவரங் திரைப்படத்தின் மூலம் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக திரைப்படங்களில் அறிமுகமான ஜீதேந்திரா. அந்த படம் சரியான திரைப்படமாக அமையாததால் அடுத்த ஐந்து வருடத்திற்கு படமே இல்லாமல் இருந்தார். இதையடுத்து, Geet Gaya Patharon Ne என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், அதன் பிறகு நிற்ககூட நேரமில்லாமல் ஆண்டுக்கு ஐந்து படங்களில் நடித்து பாலிவுட்டின் மாஸ் நடிகர் என பெயர் எடுத்தார்.

காதல் கிசுகிசு , ரகசிய உறவு: நடிகர் ஜீதேந்திரா எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தாரோ அந்த அளவுக்கு காதல் கிசுகிசு , ரகசிய உறவு என பலவற்றில் சிக்கினார். ஏக் பெச்சாரா படத்தில் நடிகை ரேகாவுடன் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதால் இருவரும் நெருங்கி பழகினர். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், ஜீதேந்திரா தனது காதல் மனைவி ஷோபானாவை பிரிய மனமில்லை என்று கூறிவிட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பாலிவுட்டின் காதல் மன்னன்: இதையடுத்து, ஹேமமாலினியுடன் நெருங்கி பழகினார். ஆனால், ஹேமமாலியின் குடும்பத்தினர் காதலை எதிர்த்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதன்பிறகு ஹேமமாலினி தர்மந்திராவை திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டதால், மன வேதனையில் இருந்த ஸ்ரீதேவி ஜீதேந்திராவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்படி பாலிவுட்டின் காதல் மன்னன் ஜீதேந்திரா இருந்தார் என்று பழைய கதையை பாலிவுட் மீடியாக்கள் அசைபோட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X