கேக் சாப்ட்டா குண்டாயிடுவீங்க.. பிறந்தநாளும் அதுவுமாய் பிரபல இயக்குநரை வெறுப்பேற்றிய பிள்ளைகள்!

சென்னை: கேக் சாப்பிட்டால் குண்டாகி போவீர்கள் எனக் கூறி பிரபல இயக்குநரின் குழந்தைகள் வெறுப்பேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், காஸ்ட்யூம் டிசைனர், தொலைக்காட்சி பிரபலம் என பல முகங்களை கொண்டவர் கரன் ஜோஹர்.

பல படங்களை இயக்கியிருக்கும் கரன் ஜோஹர் ஏராளமான படங்களை தயாரித்து இருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் கோஸ்ட் ஸ்டோரிஸ்.

48வது பிறந்தநாள்

48வது பிறந்தநாள்

இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸில் ரிலிஸ் செய்யப்பட்டது அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படம் பிரம்மாஸ்த்ரா. இந்தப் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில் கரன் ஜோகர் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார்.

குழந்தைகளுடன்..

குழந்தைகளுடன்..

வழக்கமாக தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவார் கரன் ஜோஹர். இந்த ஆண்டு லாக்டவுனை முன்னிட்டு வீட்டில் அடைப்பட்டுள்ள கரன் ஜோஹர் தனது குழந்தைகள் யாஷ், ரூஹீ மற்றும் தாயாருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இன்ஸ்டா வீடியோ

இன்ஸ்டா வீடியோ

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் கரன். அதில் கரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது குழந்தைகள் மெழுகு வர்த்தியை அனைத்து ஆங்கில எழுத்து K வடிவில் டிஸைன் செய்யப்பட்ட கேக்கை பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடியப்படி வெட்டினர்.

குண்டாயிடுவீங்க

குண்டாயிடுவீங்க

அப்போது கரன், தனக்கு கேக் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு நீங்கள் கேட் சாப்பிட்டால் குண்டாகி விடுவீர்கள் என்று கூறும் அவரது குழந்தைகள், அவருக்கு கொஞ்சம் கூட கொடுக்காமல் தாங்களே சாப்பிடுகிறார்கள். இன்று எனக்குதான் பிறந்தநாள் ஆனால் நீங்கள்தான் கேக் வெட்டி சாப்பிடுகிறீகள், பிறந்தநாளில் நான் கொஞ்சம் குண்டாகிறேன் எனக்கும் கொடுங்கள் என கெஞ்சுகிறார் கரன்.

3 லட்சத்துக்கும் மேல்..

3 லட்சத்துக்கும் மேல்..

ஆனால் அவர் எவ்வளவோ கெஞ்சியும் கொஞ்சம் கூட அவரது குழந்தைகள் அவரை சட்டை செய்யாமல் கேக்கை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பர்த்டே லவ் என குறிப்பிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

குழந்தைகள் வீடியோ..

குழந்தைகள் வீடியோ..

கரண் தனது ‘லாக்டவுன் வித் தி ஜோஹர்ஸ்' என வீடியோக்களைப் பகிர்ந்து வருறார், அதில் அவரது குழந்தைகள் யாஷ் மற்றும் ரூஹி ஆகியோர் மிகக் கொடூரமானவர்களாக உள்ளார்கள். மேலும் கரன் ஜோஹரின் ஃபேஷன் மற்றும் அவரின் டேஸ்ட் மற்றும் அவரது எடைக்காக அவரை கேலி செய்து வருகின்றனர்.

Recommended Video

Actor Sathish celebrates his birthday | Friendship, Losliya, Annathe, Rajinikanth
இரட்டை குழந்தைகள்..

இரட்டை குழந்தைகள்..

கரன் ஜோஹரின் இரட்டை குழந்தைகளான யாஷ் மற்றும் ரூஹி வாடகைத்தாய் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு பிறந்தனர். தனது தந்தை பெயரான யாஷ் என்ற பெயரை மகனுக்கு வைத்துள்ள கரன், தனது தாயாரின் ஹீரூ என்ற பெயரை உல்டாவாக மாற்றி ரூஹி என மகளுக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X