என்னோட க்யூட்டி.24 வயசு வித்தியாசம் இருந்தாலும் என்னா அன்யோன்யம்..பிகினியில் ஆட்டம்போடும் பிரபல ஜோடி
சென்னை: அதிக வயது வித்தியாசம் இருந்த போதும் பிரபல பாலிவுட் ஜோடி ஒன்று பிகினியில் அன்யோன்யமாக ஆட்டம் போட்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன். இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.
மாடல், திரைப்பட தயாரிப்பாளர், பிட்னஸ் புரமோட்டர் என பல முகங்களை கொண்டவர் மிலிண்ட். ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சர்ச்சைகள்
இவர் தமிழில் அலெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் மிலிண்ட். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மிலிண்ட்.

காதலியுடன் நிர்வாணம்
தனது கேர்ள் பிரண்டுடன் நிர்வாணமாக ஷு விளம்பரத்தில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். உடலில் எந்த உடையும் இல்லாமல், ஷுவை மட்டும் அணிந்திருந்த அந்த ஜோடி மலைப்பாம்பை உடம்பில் சுற்றியப்படி போஸ் கொடுத்தனர். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருமணம் விவாகரத்து
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2006ஆம் ஆண்டு பிரெஞ்ச் நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளிலேயே அவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் சில ஆண்டுகள் தனியாக வசித்து வந்தார்.

24 வயது சிறியவர்
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அங்கிதா கொன்வார் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மிலிண்ட். 30 வயதான அங்கிதாவை அவரை விட 24 வயது அதிகமான 54 வயது கொண்ட மிலிண்ட் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையானது.

அன்யோன்யம்
இருப்பினும் அந்த தம்பதி செம ஜாலியாக தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இருவரும் தாங்கள் அன்யோன்யமாக இருக்கும் போட்டோக்களை தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

கமெண்ட்
மிலிண்ட் மற்றும் அவரது மனைவி நீச்சல் உடையில் ஆட்டம் போட்டிருக்கின்றனர். மேலும் பீச்சில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் ஷேர் செய்யும் போட்டோக்களுக்கு அவர்ளே கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

மை க்யூட்டி
தற்போது மிலிண்ட், தான் 1969ஆம் ஆண்டு சிறுவனாக இருந்த போது எடுத்த போட்டோவை த்ரோபேக் என கூறி ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த அவரது மனைவி, அங்கித மை க்யூட்டி என கமெண்ட் செய்திருக்கிறார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











