Animal: நான் கோஸ்ட்டுடன் மோதுறதில்லை.. கடித்து தின்றுவிடுவேன்.. வெளியானது அனிமல் படத்தின் ட்ரெயிலர்!
மும்பை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா அனில் கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அனிமல்.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது அனிமல் படம்.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
அனிமல் படம்: நடிகர்கள் ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அனிமல் படம் வரும் டிசம்பர் 1ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்தில் ரன்பீர் கபூருடன் கைக்கோர்த்துள்ளார். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
அனிமல் படத்தின் ட்ரெயிலர்: தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு குறித்த கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். முன்னதாக அர்ஜூன் ரெட்டி படத்தில் காதலர்களுக்கு இடையிலான உறவு குறித்து இவர் பேசியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள அனிமல் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மீதான அதீத பாசம்: சிறுவயதில் தன்னுடைய தந்தையால் தான் அதிகமான ஆளுமைக்கு உட்பட்டிருந்தாலும் அவர்மீது அதீதமான பாசம் கொண்டிருக்கும் இளைஞனின் மனப்போக்கு இந்த ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. முந்தைய படம் போலவே இந்தப் படத்திலும் அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தின் நீளம் 3 மணிநேரங்கள் மற்றும் 21 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் ரசிகர்களை எந்த வகையில் கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படம் குறித்த எதிர்பார்ப்பு: இந்தப் படத்தில் ராஷ்மிகா உள்ளிட்ட அனைவருக்கும் நடிக்கும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. படத்தில் ரன்பீர் கபூரின் மனைவியாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தன்னுடைய கணவனின் அப்பா மீதான அதிகமான பாசத்தை அவர் கேள்வி கேட்பதாக ட்ரெயிலரில் காணப்படுகிறது. இந்த ட்ரெயிலர் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவையும் ரசிகர்களை கவர்ந்தன.
பான் இந்தியா படம்: ரன்பீர் கபூர் பிறந்தநாளையொட்டி முன்னதாக படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரும் கவனத்தை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை கொடுத்துள்ளது. படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது படத்தின் ட்ரெயிலர் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தான் கோஸ்ட்டுடன் மோதுவதில்லை கடித்து தின்று விடுவேன் போன்ற டயலாக்குகளும் வன்முறையை தூண்டும்வகையில் அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications