அடுத்தடுத்து கொலை மிரட்டல்கள், உஷாரான பாலிவுட் நடிகர் சல்மான்கான்: துப்பாக்கிக்காக வெயிட்டிங்!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கானை, சில வருடங்கள் முன்னர் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றார்.

இந்நிலையில், சல்மான் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளது பாலிவுட்டில் புயலைக் கிளப்பியுள்ளது.

போற இடமெல்லாம் தகராறு

போற இடமெல்லாம் தகராறு

சல்மான் கான் என்னதான் இந்தி திரையுலகில் சுப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும், அவரை சுற்றிய சர்ச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது. சினிமா சூட்டிங், பொது நிகழ்ச்சிகள், சோஷியல் மீடியா என சல்மான் கான் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கு அரை டஜன் கணக்கில் தகராறுகள் நடக்கும். இதனால், அவரை பற்றிய சர்ச்சையான செய்திகள் எதாவது ஒருவடிவத்தில் வெளியாகிக் கொண்டே இருப்பது வழக்கம்.

மான் வேட்டை

மான் வேட்டை

சக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் இவர்களிடம் சல்மான் கான் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதும், பின்னர் சமாதானம் ஆகிவிடுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிக்கியதும், அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாகின. அதுமட்டும் இல்லாமல், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்களும் வரத் தொடங்கின.

பிஷ்னோய் இனமக்கள் மிரட்டல்

பிஷ்னோய் இனமக்கள் மிரட்டல்

மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. பின்னர் சல்மான் கான் ஜாமினில் வெளியே வந்ததும், பிஷ்னோய் இனமக்களால் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அதாவது மான்களை தெய்வமாக வழிபடும் அவர்கள், சல்மான் கான் மீது கடும் போபத்தில் இருந்தனர். ஒருகட்டத்தில் அவர்கள் சல்மான் கனை கொலை செய்வோம் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தனர்.

லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோய்

பிஷ்னோய் இனமக்களில் ஒருவரான லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானை சுட்டுக் கொலை செய்யும் திட்டத்துடன் அவரது வீட்டைக் கண்காணித்ததும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கிகளை கையாள்வதில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற லாரான்ஸால், எப்போது வேண்டுமானாலும் சல்மான் கானின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என மும்பை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியாக லாரன்ஸ் பிஷ்னோய்யை போலீஸார் கைதும் செய்தனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்நிலையில், சமீபத்தில் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சித்து மூஸேவாலா போல் சுட்டுக் கொலை செய்வோம் என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிவசேனா பிரமுகரின் மகன், சல்மான் கானை பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.

துப்பாக்கி லைசென்ஸ்

துப்பாக்கி லைசென்ஸ்

தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கும் சூழலில், அவர் துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற அவர், துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சல்மான் கான், புதிதாக பதவியேற்ற ஆணையர் விவேக் பன்சல்கர் தனது நெருங்கிய நண்பர் எனவும், அவருக்கு வாழ்த்து சொல்லவே காவல் நிலையம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X